1985 மற்றும் 1990ம் ஆண்டு காலங்களில் முற்று முழுதாக இடம் பெயர்ந்து மீளக்குடியேற்ற பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்ட கல்குடா தேர்தல் தொகுதி, கோற்ளைப்பற்று வடக்கு, வாகரை பிரதேச செயலகத்திற்குட்பட்ட புணாணை கிழக்கு கிராம சேவகர் பிரிவிலுள்ள நாவலடி கேணிநகர் கிராமத்தில் அராங்கத்தினால் கட்டி கொடுப்பதற்கு தயார் நிலையில் உள்ள வீடமைப்புதிட்டத்தில் 12 வீடுகள் தருவதாக வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மக்களிடம் கிராம சேவை உத்தியோகத்தர் கனகரத்தினம் சுபோஸ் இலஞ்சம் பெற்றுக்கொண்டதாக கேணிநகர் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
மேலும் பிரதேசத்தில் சமூக அமைப்புக்களில் அங்கம் வகிக்கின்ற சுபைர், ஆதம்பாவா,அப்துல் கபூர் போன்றவர்களை வைத்து கிராம சேவையாளர் ரூபாய் 25000, 20000, 15000, 5000 தொகைகளை இலஞ்சம் பெற்றுக்கொண்ட பிறகும் தங்களுக்குக்கான வீடுகள் சிபார்சு செய்யப்படவில்லை என கேணிநகர் பிரதேசத்தில் உள்ள மக்களின் ஆதங்கமாக இருக்கின்றது.
இது சம்பந்தமாக நாவலடி கேணிநகர் பிரதேசத்தின் கிராம சேவக உத்தியோகத்தரான கனகரத்தினம் சுபோசினை நேரில் சந்தித்து வினவிய பொழுது அவ்வாறான நடவடிக்கைகளை தான் முற்றாக மறுப்பதோடும், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டானது உண்மைக்கு புறம்பானதும், திரிவு படுத்தப்பட்ட விடயம் எனவும் தெரிவித்தார். அத்தோடு தன்மீது குற்றம் சுமத்துபவர்கள் மேற்கொள்ளும் அனைத்து சட்டரீதியான நடவடிக்கைகளுக்கும் முகம் கொடுத்து தான் நிரபராதி என நிரூபிக்கும் அதே நேரத்தில் தனது மேலதிகாரியான வாகரை பிரதேச செயலளாரிடம் இது சமபந்தமாக முறையிட்டு தன்மீது வீண்பழி சுமத்தியவர்களுகு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஆனால் குறித்த வீடமைப்பு திட்டம் சம்பந்தமாக குறித்த கேணிநகர் பிரதேசத்து மக்களுக்கு முதற் தடவையாக தகவல் வழங்கியதாக கூறப்படும் ஜனாப் ஹைதர் எனும் நபரிடத்தில் வினவிய வேளையில் குறித்த கிராம சேவகரானவர் சகல அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் முன்னேற்றம் அடையாது காணப்பட்ட கேணிநகர் கிராமத்தினை சகல நிருவாக கட்டமைப்புக்களையும் அமைத்து முழுமைபடுத்தப்பட்ட கிராமமாக மாற்றிய பெருமை கிராம சேவகர் கனகரத்தினம் சுபோசையே சாரும் என தெரிவித்தார். அது மட்டுமல்லாமல் வாகரை பிரதேச செயலாளர் ராகுல நாயகியுடன் கிராம சேவகர் குறித்த பிரதேசத்து மக்களின் குறைகளை எடுத்துக்கூறியதன் அடிப்படையிலேயே 12 வீடுகளும் கேணி நகருக்கு கிடைக்கப்பெற்றன.
அத்தோடு குறித்த கிராம சேவகர் மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டினை தானும் முற்றாக மறுப்பதாக தெரிவித்த ஹைதர், பின்தங்கிய குடுபங்கள் என்ற அடிப்படையில் பிரதேச மக்களினுடைய வாக்கெடுப்பின் மூலமே குறித்த 12 வீடுகளுகான குடுபங்களை தெரிவு செய்தாகவும் தெரிவித்தார். கிராம சேவக உத்தியோகத்தர் கனகரத்தினம் சுபோஸ் எங்களுக்கு மிகவும் பக்கபலமாக இருந்து பிரதேச செயலாளருடன் கதைத்து 12 வீடுகளையும் கேணிநகருக்கு கொண்டு வராமல் விட்டிருப்பாரானால் 12 வீடுகளும் வேறு பிரதேசங்களிலே அமைக்கப்படிருக்கும் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். அது மட்டுமல்லாமல் மேலும் பல வீடுகளை எதிர் காலத்தில் முஸ்லிம் பிரதேசங்களுக்கு கொண்டு வர இருக்கின்ற குறித்த கிராம சேவகரான கனகரத்தினம் சுபோஸ் ஒரு திறமை வாய்ந்த சுத்தமான கைகளை கொண்ட கிராம சேவக உத்தியோகத்தர் என்பதிலும் மாற்றுக்கருத்தில்லை என ஜனாப் ஹைதர் தெரிவித்தார்.
நாவலடி கேணிநகர் மக்களிடம் இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களும், அது சம்பந்தமாக கிராம சேவக உத்தியோகத்தர் கனகரத்தினம் சுபோஸ், மற்றும் ஜனாப் ஹைதர் ஆகியோர்களின் விளக்கங்களும் அடங்கிய காணொளியானது எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.