ஸ்ரீ லங்கா உலமா கட்சிக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) வுக்குமிடையில் சிநேகபூர்வமான சந்திப்பு நடைபெற்றது. இதன் போது ஸ்ரீ ல தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அதன் தலைவர் சு.ஆ ரியால் பொதுச்செயலாளர் அப்துர்ராஸிக், துணை தலைவர் பர்ஸான்,துணை செயலாளர்களான ரஸ்மின், ஹிஷாம், முயீன் ஆகியோரும் உலமா கட்சி சார்பில் அதன் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி, இணைச்செயலாளர் இஸ்ஸ்தீன் (முன்னாள் கொழும்பு மாநகர உறுப்பினர்) ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்த முனையும் முஸ்லிம்களுக்கெதிரான அரசின் சதிக்கெதிராக ஸ்ரீ த ஜமாஅத் மேற்கொண்ட ஜனநாயகரீதியிலான ஆர்ப்பாட்டங்களுக்கு உலமா கட்சித்தலைவர் தமது கட்சி சார்பில் பாராட்டுக்களை தெரிவித்தார். அத்துடன் இவ்வாறான மார்க்க ரீதியிலான அமைப்புக்கள் அனைத்தும் சமூக பிரச்சினைகளின் போது மௌனமாக இருக்கும் போது ஸ்ரீ தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமே அக்கறை காட்டியமை அவர்களின் சமூக அக்கறையை காட்டுகிறது எனவும் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து இலங்கை அரசியலின் சம கால நிலைமை, சமூகத்தின் எதிர் காலம், தேர்தல் முறை மாற்றத்தில் முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பாதிப்பு போன்ற பல விடயங்கள் சிநேகபூர்வமாக கலந்துரையாடப்பட்டன.