சிவனொளிபாதமலைக்கு போதைபொருள் கொண்டு செல்வதை தடுக்க மோப்ப நாயின் உதவி.!

க.கிஷாந்தன்-
சிவனொளிபாதமலைக்கு போதைப் பொருள் கொண்டு போவதை தடுத்து நிறுத்துவதற்காக அட்டன் மோப்ப நாய் பிரிவின் உதவியுடன் 24.12.2016 அன்று மாலை 3.30 மணியளவில் மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவுசாகலை சந்தயில் உள்ள காவல் அறனில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் போது ஹெரோயின் போதை பொருள் 40 மில்லிகிராம் வைத்திருந்த நபர் ஒருவர் மஸ்கெலியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் விசாணையின் பின் அட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக மஸகெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

பல்வேறு பிரதேசங்களிலிருந்து சிவனொளிபாதமலைக்கு வருகை தரும் யாத்திரிகர்களில் ஒரு சிலர் போதை பொருள்களை சிவனொளிபாதமலைக்கு கொண்டு செல்வதாக இரகசிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலினையடுத்தே இந்த மொப்பநாய்களின் உதவியுடன் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது சிவனொளிபாதமலை யாத்திரைக்காக வருகை தந்த ஐம்பதற்கும் மேற்பட்ட வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன.

இந்த சோதனை நடவடிக்கையில் அட்டன் பொலிஸாரும், மஸ்கெலியா பொலிஸாரும் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -