இலங்கை – தென்னாபிரிக்கா மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று

தென்­னா­பி­ரிக்க – இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று போர்ட் எலி­ச­பெத்தில் ஆரம்­ப­மா­கின்­றது. இலங்கை கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்­டிகள், 3 இரு­ப­துக்கு 20 போட்­டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்­டி­களில் விளை­யா­டு­வ­தற்­காக தென்­னா­பி­ரிக்­கா­விற்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்­டுள்­ளது.

இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி போர்ட் எலி­ச­பெத்தில் இன்று இலங்கை நேரப்­படி பிற்­பகல் 1.30 மணிக்கு ஆரம்­பமா­கின்­றது. 

சொந்த மண்ணில் விளை­யா­டு­வதால் தென்­னா­பி­ரிக்க அணி இந்த டெஸ்ட் தொடரில் இலங்­கைக்கு மிகப்­பெ­ரிய சவா­லாக இருக்கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இரு அணி­களும் இது­வரை 22 டெஸ்ட் போட்­டி­களில் மோதி­யுள்­ளன. இதில் தென்­னா­பி­ரிக்கா 11 டெஸ்ட் போட்­டி­க­ளிலும், இலங்கை 5 டெஸ்ட் போட்­டி­க­ளிலும் வெற்றி பெற்­றுள்­ளன. 6 டெஸ்ட் போட்­டி­கள் சம­நி­லையில் நிறை­வ­டைந்­துள்­ளன. 

இந்­நி­லையில் அஞ்­சலோ மெத்­தியூஸ் மற்றும் சந்­திமால் ஆகியோர் அணிக்கு மீண்டும் திரும்­பி­யுள்ள நிலையில் இளம் அணி­யி­ன­ருடன் இலங்கை அணி கள­மி­றங்­கு­கி­றது.

இலங்கை அணி

அஞ்­சலோ மெத்­தியூஸ், துஷ்­மந்த சமீர, தனஞ்­சய டி சில்வா, ரங்­கன ஹேரத், லஹிரு குமார, குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, உபுல் தரங்க, விகும் சஞ்­சய, டினேஷ் சந்­திமால், நுவன் பிரதீப், திமுத் கரு­ணா­ரத்ன, சுரங்க லக்மால், டில்­ருவன் பெரேரா, கௌஷால் சில்வா.

தென்­னா­பி­ரிக்க அணி

டுபிளஸிஸ், ஹசீம் அம்லா, ஸ்டீபன்குக், டி கொக், டியன் எல்கன், வெய்ன் பர்னல், ரபடா, கெய்ல் அபோட், டெம்பா பவுமா, டி பிரைன், பௌல் டுமினி, கெஷாப் மஹாராஜ், வெர்னோன் பிளண்டர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -