கல்முனை மாநகர சபையின் பட்ஜெட்டை பொது மக்கள் பார்வையிடலாம்!

அஸ்லம் எஸ்.மௌலானா-
ல்முனை மாநகர சபையின் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்ட நகல் பிரதிகளை பொது மக்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார். 

இதன் பிரகாரம் இன்று வியாழக்கிழமை (22) தொடக்கம் எதிர்வரும் புதன்கிழமை (28) ஆம் திகதி வரை அலுவலக நேரங்களில் மாநகர சபையின் நிதி பிரிவில் இந்த வரவு- செலவுத் திட்ட நகல் பிரதிகளை பொது மக்கள் பார்வையிட முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன் இவ்வரவு- செலவுத் திட்டம் தொடர்பில் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை முன்வைக்க விரும்புவோர் எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னர் அவற்றை எழுத்து மூலம் சமர்ப்பிக்கலாம் எனவும் ஆணையாளர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -