ஹைதர் அலி
கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட அறபா நகர் கிராமத்தின் பிரதான வீதியில் தெரு மின்விளக்குகள் இல்லாமையினால் அவ்வீதியில் வசிக்கும் மக்கள் இரவு நேரங்களில் விச ஜந்துக்களின் பல இன்னல்களுக்கு முகம்கொடுத்து வந்தனர்.
இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்திய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் செயலாளர் ஜே. சர்வேஸ்வரன் அவர்களிடம் இக்கிராத்திலுள்ள மக்களின் நலன்கருதி அவசியத்தேவைப்பாடாகவுள்ள இடங்களை இனங்கண்டு அவ்வீதியில் தெரு மின்விளக்குகளை இடுமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.
அதற்கமைவாக 2016.12.28ஆந்திகதி - புதன்கிழமை பிரதேச சபையினால் அடையாளம் காணப்பட்ட அறபா நகர் கிராமத்தின் பிரதான வீதியிலுள்ள இடங்களுக்கு தெரு மின்விளக்குகள் பொருத்தப்பட்டன.
கல்குடா லைவ் ஊடக குழுமத்தினரின் அழைப்பின்பேரில் கடந்த 2016.11.28ஆந்திகதி - திங்கட்கிழமை அப்பகுதியில் வசிக்கும் 15 குடும்பங்களின் தேவைப்பாடுகளை கேட்டறியுமுகமாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்ததோடு அவருடன் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பீ.எஸ். ஹமீட் மற்றும் மாகாண சபை உறுப்பினரின் ஊடக இணைப்பாளர் எம்.ரீ. ஹைதர் அலி ஆகியோரும் சென்றிருந்தனர்.
அவ்வீதியில் வசிக்கும் மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் ஒன்றான தெரு மின்விளக்குகளை இட்டமைக்கு கல்குடா லைவ் ஊடக குழுமத்தினரும், அப்பகுதி மக்களும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் மற்றும் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் செயலாளர் ஜே. சர்வேஸ்வரன் ஆகியோருக்கும் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.