எல்லை நிர்ணய பணிகள் இன்னும் முடிவடையவில்லை..!

ல்லை நிர்ணய பணிகள் 10 வீதமான நடவடிக்கைகள் இன்னும் முடிவடையவில்லை என எல்லை நிர்ணய குழுவின் தலைவர் அசோகா பீரிஸ் தெரிவித்துள்ளார். எல்லை நிர்ணய அறிக்கை இன்று (27) சமர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பயிஸர் முஸ்தபா வெளிநாடு பயணமாகியுள்ள நிலையில் எல்லை நிர்ணய அறிக்கையினை ராஜாங்க அமைச்சர் பயங்கர ஜெயரத்னவிடம் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் வடக்கு மற்றும் வடமேல் மாகாணத்தில் குருநாகல் மாவட்டம் போன்ற ஐந்து மாவட்டங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு நடவடிக்கைகள் நிறைவடையாத காரணத்தினால் அறிக்கை சமர்ப்பிக்க படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எல்லை நிர்ணயம், வரைபடம் மற்றும் மொழிபெயர்ப்பு போன்ற மூன்று விடையதானங்களை கொண்டதாக எல்லைநிர்ணய பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதில் எல்லை நிர்ணயம், வரைபடம் ஆகியன முற்று முழுதாக நிறைவு பெற்றுள்ளதாகவும் மொழிபெயர்ப்பில் ஐந்து ஏற்பட்ட தாமதத்தின் காரணமாகவே இந்த சிக்கல் ஏற்பட்டது என குழுவின் தலைவர் தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -