பாறுக் ஷிஹான்-
தபால் திணைக்கள ஊழியர்கள் மேற்கொண்ட இரண்டு நாள் வேலைநிறுத்தம் முடிவிற்கு வந்ததை அடுத்து தபாலகங்கள் இய ல்பு நிலைக்குத் திரும்பியுள்ளநிலையில் யாழ் குடாநாட்டிலும் தபால் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன..
நாடுதழுவிய ரீதியில் கடந்த இரு தினங்களாக ஏழு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந் நிலையில் நேற்று நள்ளிரவுடன் இவர்களின் வேலைநிறுத்த போராட்டம் முடிவிற்கு வந்ததை அடுத்து தபாலக சேவைகள் வழ மைக்கு திரும்பியுள்ளன.
இரண்டு நாட்களாக பொதுமக்கள் தமது தேவைகளை நிறைவேற்றுவதில் தடங்கல் ஏற்பட்டமையால் இன்றைய தினம் அதிகள வான பொதுமக்கள் அஞ்சல் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்து தமது தேவைகளை பூர்த்தி செய்வதை காணக்கூடியதாக உள்ளது.
இதே வேளை நெல்லியடி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள தபால் பெட்டியினுள் வெற்றிலை எச்சில் துப்பப்பட்ட நிலையில் கடிதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு நாட்களாக தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதனால் தபால்கள் எவையும் மீட்கப்படவில்லை.
இன்று வேலைநிறுத்தம் மமுடிவுற்ற நிலையில் இன்று காலை வழமைபோன்று ஊழியர் ஒருவரினால் தபால்கள் மீட்பதற்காக நெல்லியடி பஸ் தரிப்பு நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தபால் பெட்டியை திறந்த போது வெற்றிலை எச்சில் துப்பப்பட்ட நிலையில் கடிதங்கள் கிடந்துள்ளன.