கிழக்கிலிருந்து கண்டிக்கும் கொழும்புக்கும் சிகிச்சைக்கு அலையும் மக்களின் துயருக்கு தீர்வு - கிழக்கு முதல்வர்

ண்டிக்கும் கொழும்புக்கும் நோயாளிகளை கூட்டிக் கொண்டு அலையும் மக்களின் துயர் நிலையைப் போக்க கிழக்கிலே சகல வசதிகளுடனான மருத்துவமனையொன்றை அடுத்த ஆண்டுக்குள் நிர்மாணிக்க நடவடிக்கை எடுப்பதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண வரவு செலவுத்திட்டத்தின் சுகாதார அமைச்சு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைக் கூறினார்.

தினந்தோறும் கிழக்கு மக்கள் நோயாளிகளைக் அழைத்துக் கொண்டு கண்டிக்கும் கொழும்புக்கும் மருத்துவத் தேவைகளுக்காக அலையும் துயரத்தை தாம் கண்டு நான் எத்தனையோ தடவைகள் மனம் கலங்கியவன் என்ற அடிப்படையில் கிழக்கில் சகல வசதிகளுடனான மருத்துவமனையொன்றை அமைக்க வேண்டும் என்று அப்போதே என்னுள் எண்ணமிட்டேன்.

அதற்கான நடவடிக்கைகளை தற்போது நாம் முன்னெடுத்து வருகின்றோம் அடுத்த வருடமளவில் அதற்கான முழு நடவடிக்கையும் எடுப்பதற்காக மத்திய அரசுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்க எதிர்ப்பார்த்துள்ளோம்.

அது மாத்திரமன்றி தற்போது கிழக்கின் சில வைத்தியாலைகளில் ஆளணிப் பற்றாக்குறை மற்றும் வைத்திய உபகரணப பற்றாக்குறை ஆகியன காணப்படுகின்றது என்பதை நாம் அறிவோம் குறைபாடுகள் காணப்படும் வைத்தியசாலைகளை அடையாளங்கண்டுள்ளதுடன் எதிர்வரும் ஆண்டு அந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் ஆண்டாக அமையும் என்பதையும் நான் கூற வேண்டும்.

மத்திய அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கும் ராஜித சேனாரத்ன அவர்கள் அதிகாரப் பகிர்வு தொடர்பில் சாதகமான கருத்துக்களை தெரிவிப்பர் என்ற வகையில் கிழக்கு மாகாணத்தின் சுகாதார வளர்ச்சிக்கு உரிய பங்களிப்பினை அவர் வழங்குவார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.

எமது ஆட்சிக்காலப் பகுதிக்குள் கிழக்கின் சுகாதாரத்துறையை சகல அங்கங்களிலும் வளம் பெறச் செய்வதே எமது நோக்கமாகும் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

இன்று எம்மீது ஆட்சிப் பொறுப்பு சுமத்தப்பட்டு ஒரு வருடக்காலப் பகுதிக்குள் கிழக்கின் பல பகுதிகளில் வைத்தியசாலைகள் புனரமைக்கப்பட்டு தளபாட மற்றும் வைத்திய உபகரணக் குறைபாடுகளை பெருமளவு நாம் நிவர்த்தி செய்திருக்கின்றோம் என்ற மனத் திருப்தி எமக்குள் இருக்கின்றது என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -