சகல இனங்களுக்கிடையிலும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள நத்தார் மரம் காரணமாக அமையும் என துறைமுகங்கள் புனர்வாழ்வு அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த நத்தார் மரத்தை அமைப்பதற்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் தமது உதவிகளை பல்வேறு விதமாக வழங்கினார்கள். மத விமர்ஷனங்களை மேற்கொள்வோர் இந்த நத்தார் மரத்தை விமர்சனம் செய்து வருவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (24) நள்ளிரவு நத்தார் மரத்தை திறந்து வைத்து உரையாற்றுகையில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.