அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியிலே களுவாஞ்விக்குடி வைத்தியசாலை அபிவித்தி கண்டது.!

எம்.ஜே.எம்.சஜீத்-
வைத்தியசாலை அபிவிருத்திகள் தொடர்பில் இன ரீதியாக நோக்காமல் மனித நேயத்துடன் சிந்திக்குமாறும், இன மற்றும் மொழி ரீதியான பேச்சுக்களை பேசுவதற்கு யாரும் முற்பட வேண்டாமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் போது சுகாதார அமைச்சுக்கான நிதியொதுக்கீடு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதனூடாக படுவான்கரை பிரதேசத்தில் வாழும் மக்களின் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும் என முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராகவிருந்த ஹிஸ்புல்லா அவர்கள் என்னியதனாலே அவ்வைத்தியசாலையை ஜெய்க்கா திட்டத்தில் உள்வாங்கி சுமார் 525 மில்லியன் ரூபா நிதியினை பெற்று அவ்வைத்தியசாலையின் அபிவிருத்தியில் பங்கெடுத்தார்.

முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லாவின் அந்த அரும்பணியினை யாரும் மறந்துவிட முடியாது. வைத்தியசாலை அபிவிருத்திகள் தொடர்பில் இன ரீதியாக நோக்க வேண்டாம். அது மனித நேயத்துடன் பார்க்கப்பட வேண்டிய விடயமாகும் இந்த விடயத்தில் இன மற்றும் மொழி ரீதியான பேச்சுக்களை பேசுவதற்கு யாரும் முற்பட வேண்டாம் அப்படி யாரும் பேசுவதற்கு முற்பட்டால் நாங்களும் அட்டவணைப்படுத்தி பேச வேண்டியேற்படும்.

அன்று அமைச்சர் ஹிஸ்புல்லா இன ரீதியாக சிந்தித்திருந்தால் இன்று களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை அபிவிருத்தியடைந்திருக்க முடியாது. எனவே அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பில் இன ரீதியாக நோக்க வேண்டாம். சுகாதாரத்துறையை இன ரீதியாக நோக்காமல் மனித நேயம்கொண்ட துறையாகவே கருத வேண்டும்.

இன்று கிழக்கு மாகாணத்தில் புற்று நோயின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதாகவும், கிழக்கில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் சாம குனதிலக தெரிவித்துள்ளார். இதில் மார்பக புற்றுநோய், வாய்ப்புற்று நோய் என்பவற்றினாலே அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது சம்மந்தமாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு அதிக கவனம் செலுத்தி மத்திய அரசுடன் இணைந்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி இந்நோயினை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் இருதய சத்திர சிகிச்சை தரத்தில் குறைபாடுகள் காணப்படுவதாக மத்திய அரசாங்கத்திலுள்ள சுகாதார துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்திலுள்ள இருதய நோயாளர்களில் பெருமளவிலானோர் சத்திர சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கே அனுப்பப்பட்டு அங்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 12 வைத்திய நிபுணர்கள் இருதய சத்திர சிகிச்சைகளை மேற்கொள்வதாகவும், அவர்கள் கடமை நேரங்களில் அங்குள்ள வளங்களை கொண்டுசென்று தனியார் வைத்தியசாலையில் கடமை புரிவதாகவும், அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார். இந்தவிடயம் மிகவும் பாரதூரமானதாகும்.

கிழக்கு மாகாண இருதய நோயாளர்களின் நலன் கருதி இருதய நோயாளர்கள் சிகிச்சைகளைப் பெற கிழக்கு மாகாணத்தில் அல்லது கிழக்கு மாகாணத்தை அண்டிய பகுதியில் வைத்தியசாலை ஒன்றை அமைப்பதற்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் அத்துடன் கிழக்கு மாகாண சபை மத்திய அரசிடம் இதற்கான கோரிக்கைகளையும் முன்வைக்க வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -