இனவாதிகளுக்கு பால்கொடுத்து வளர்க்கின்றதா இந்த நல்லாட்சி..?

ந்த நல்லரசாங்கம்,  இனவாதிகளுக்கு பால்கொடுத்து வளர்க்கின்றார்களா? என்ற சந்தேகம், இப்போது எல்லா மக்களுக்கும் ஏற்பட்டுக் கொண்டுவருவதை நாம் காண்கின்றோம். இந்த நல்லாட்சியை கொண்டுவர உதவிய முஜிவுர் ரகுமான், அஸாத்சாலி போன்றவர்கள் கூட இந்த நல்லரசாங்கத்தின் செயல்பாட்டை விமர்சித்து அறிக்கைகள் விடுவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

அண்மைக் காலங்களாக இந்த நாட்டின் ஜனாதிபதியும், நீதி அமைச்சரும் இனவாதத்தின் மொத்த உருவமான ஞானசாரவை, அரவணைத்துச் செல்வதோடு, அடிக்கடி அந்த ஞானசாரவை ஜனாதிபதி அவர்கள் சந்தித்தும் வருகின்றார். பல வழிகளிலும் முஸ்லிம் சமூகத்தை தாக்கி பேசியும், இல்லாத பொல்லாத கதைகளைக் கூறியும் வந்த ஞானசார, முஸ்லிம்கள் பௌத்த தலங்களை அழிக்கின்றார்கள் என்ற புதுக்கதை ஒன்றையும் ஜனாதிபதியிடம் தெறிவித்துள்ளார்.

அந்தக் கருத்தில் உண்மையுள்ளதா..?  என்று பார்க்காத ஜனாதிபதி அவருடைய கதையை வேதவாக்காக ஏற்றுக் கொண்டு, அவரின் மூலமாக பௌத்த சின்னங்களை பாதுகாக்க வேண்டுமென்றும் கருத்துத் தெறிவித்தும் இருக்கின்றார். அதே நேரம் அவருடைய இனவாத கருத்துக்களை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவும் பிரச்சாரம் செய்து வருவதற்கு அனுமதி அளித்துள்ளார்.

அந்த செயல்பாட்டை முஜிவுர் ரகுமான் கூட கண்டித்து அறிக்கை விட்டுள்ளதையும் நாங்கள் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இந்த ஞானசாரவை இந்த அளவுக்கு இவர்கள் அணைத்துச் செல்வதையும், அவருக்கு முக்கியத்துவம் கொடுப்பதையும் பார்த்தால், இந்த ஆட்சிமாற்றத்துக்கும், இந்த இனவாதிகளுக்கும் சம்பந்தம் உள்ளதா.? என்றும் நாம் சந்தேகப்படுவதில் நியாயம் இல்லாமலும் இல்லை.

ஏனென்றால் இந்த ஆட்சி மாற்றத்துக்கு உறுதுணையாக இருந்த முஸ்லிம் மக்களின் என்னங்களை காலுக்குள் போட்டு மிதிப்பதை போல்தான் இந்த அரசாங்கம் ஞானசாரவுடன் நடந்து கொள்வதை கருதவேண்டியுள்ளது. 

இவர்கள் இப்படி நடந்து கொள்வதற்கு காரணம் என்ன..?

இவர்களுக்கு பின்னால் இருப்பது யார்..? 

இவர்கள் யாருடைய என்னங்களை இங்கே செயல்படுத்த முயற்சிக்கின்றார்கள்..? என்பதை, அவர்களுடைய செயல்பாட்டை உண்ணிப்பாக கவணிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள். 

முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சகூட அண்மையில் இந்த பொதுபல சேனாவை வழர்த்தது சம்பிக்க ரணவக்கதான் என்றும், அவர்களுக்கு எதிராக நான் நடவடிக்கை எடுக்க முற்பட்ட போதெல்லாம் இந்த சம்பிக்கவும், ராஜித சேனாரத்தினவுந்தான் என்னை தடுத்தார்கள் என்று கூறியுள்ளார். இந்த விடயம் முஸ்லிம் அமைச்சர்களுக்கும் தெறியும் என்றும் கூறியிருந்தார்.

இவர்கள் என்னுடைய ஆட்சியை கவிழ்பதற்கு நோர்வே போன்ற நாடுகளுக்குச் சென்று அவர்களுடைய நிதியைப் பெற்று செயல்பட்டவர்கள், இவர்களுடைய செயல்பாட்டை நான் கண்டு கொள்ளாமல் விட்டது எனது தவறுதான் என்றும் கூறியிருந்தார். இது எந்தளவு உண்மை என்று எமக்கு சந்தேகம் இருந்தாலும், அவர் கூறும் காரணத்தையும், இப்போது அரசாங்கமும் ஞானசார அவர்களும் நடந்து கொள்ளும் விடயமுமே, அவர்களின் நிலைப்பாட்டை காட்டிக்கொடுக்கின்றது.

அண்மையில் பொதுபல சேனாவின் செயளாலர் கூறியிருந்தார்....

தங்களுக்கு பல வழிகளிலும் உதவிகள் செய்து வருவது நோர்வே அரசுதான் என்றும், டயஸ் போராக்களை நாங்கள் சந்தித்து பேசுவதற்கு எறிக்சொல்கைம் தான் உதவியும் செய்து தந்திருந்தார் என்றும் மிகப் பகிரங்கமாகவே தெறிவித்திருந்தார்.

அவர்களின் கருத்தினூடாக அவர்கள் யார்மூலம் இயக்கப்படுகின்றார்கள் என்பது புலனாகும், அதே நேரம் நோர்வே கடந்த காலங்களில் இலங்கை விடயத்தில் எப்படி செயற்பட்டார்கள் என்பது எல்லோரும் அறிந்த விடயம்.   

புலிகள் அழிக்கப்பட்டது அவர்களுக்கு ஜீரணிக்க முடியாத விடயம் என்பதும், அதற்குக் காரணமாக இருந்தவர்களை அவர்களுக்கு பிடிக்காது என்பதும், தற்போது அவர்களின் நடவடிக்கையைக் கொண்டே புரிந்து கொள்ளலாம்.

தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தி, தலை நிமிர்ந்து நின்ற நேரம், அமெரிக்கா போன்ற நாடுகள் மௌனிகளாக இருந்து விட்டு, இப்போது தூங்கி எழுந்ததனைப்போல், தமிழர்களுக்காக நாங்கள் நியாயம் தேடுகின்றோம் என்று நாடகமாடுவது பலத்த சந்தேகத்தை உண்டுபண்னுகின்றது.

இந்த போராட்டம் முடிவுக்கு வந்தது அவர்களுக்கு பிடிக்கவில்லை, அதே நேரம் அவர்களின் திட்டத்தில் மண்ணைத் தூவியவர்களையும் அவர்களுக்கு பிடிக்கைவில்லை என்பது, அவர்களுடைய தற்போதைய நடவடிக்கை மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.

இப்படியான என்னங்களைக் கொண்ட நோர்வே, அமெரிக்கா போன்ற நாடுகளின் அனுசரணையில் வாழ்பவர்கள், நிச்சயமாக அவர்களின் என்னங்களை செயல் படுத்துபவர்களாகத்தான் இருப்பார்கள்.

இதற்கெல்லாம் சூத்திர தாரியாக இருப்பவர்தான் இந்த சம்பிக்க ரணவக்க ஆவார்... இவர்தான் இனவாதிகளை வைத்து, தான் உயர்ந்த இடத்துக்கு வரவேண்டும் என்ற என்னம் கொண்டவர். இவருக்கும் ஞானசேராவுக்கும் நெருங்கிய உறவு உள்ளது என்பது அவர்களுடைய செயல்பாட்டைக் கொண்டே தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

சம்பிக்க ரணவக்கவின் தாயின் மரணவீட்டில் வைத்து, 2020ல் சம்பிக்கதான் ஜனாதிபதி ஆகுவார் என்று, இந்த ஞானசார அவர்கள் அன்று ஆரூடம் வேறு தெறிவித்திருந்தார். அண்மையில் ஒரு கூட்டத்திலும் ஞானசார, யுத்த வெற்றிக்கு சம்பிக்கதான் காரணம் என்றும் கூறியிருந்தார். இப்போது அந்த சம்பிக்க ரணவக்க அவர்கள் எங்கே தஞ்சம் அடைந்துள்ளார் என்பது நமக்கு தெறியாத ஒன்றல்ல.

அவர் இந்த நல்லரசாங்கத்தின் முக்கிய புள்ளியாக இருக்கின்றார், அவர் இந்த ஞானசாரவுக்கு எதிராக இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதற்கு அனுமதிப்பாரா? என்பதும் சந்தேகம்தான். தான் இப்போது பகிரங்கமாக இனவாதத்தைப் பேசாது விட்டாலும் பொதுபல சேனா போன்ற இனவாத இயக்கங்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு, தனது காரியத்தை சாதித்துக்கொண்டு வருகின்றார் என்பதை எத்தனை பேர் அறிந்தார்களோ தெறியாது.

அவர்களுடைய திட்டங்களை நிறைவேற்றுவதற்கு, முஸ்லிம் சமூகத்தை பந்திக்கு இழுத்து, இல்லாத விடயத்தை இருப்பதாகக் கூறிக் கொண்டு திறியும் இந்த இனவாதிகளுக்கு, இந்த அரசாங்கமும் துணைபோவதினூடாக, இவர்கள் எல்லோரும் ஒரு குழுவாகத்தான் இயங்குகின்றார்கள் என்பது தெளிவாகின்றது.

ஆகவே முஸ்லிம் சமூகம் இந்த விடயத்தை மிகக் கவணமாகக் கையாள வேண்டும், அப்படி அவர்கள் இதைக் கவணத்தில் கொள்ளாமல் இருந்தார்களேயானால் பின்விளைவுகள் மிகப் பாரதூரமாக அமையலாம். இந்த விடயங்களை நன்றாகவே அறிந்து வைத்துள்ள நமது அரசியல் வாதிகள், தங்களுடைய அரசியல் வாழ்க்கைக்காக இதனைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல் இருக்கின்றார்கள் என்பதே உண்மைாகும்.

என்ன நடக்கப் போகின்றது என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

எம்.எச்.எம்.இப்ராஹிம்
கல்முனை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -