எஸ்.அஷ்ரப்கான்-
மிஸ்ரோ (mysro) அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முஹம்மட் நஸ்ஹதுல் பலாஹி கடந்த வருடம் கொழும்பு மாலபே சிங்கள மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற கலை கலாச்சாரப் போட்டியில் பேச்சுப் போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடம் பெற்றிருந்தார்.
அகில இலங்கை ரீதியில் முதலாமிடம் பெற்றமைக்காக இவரை பாராட்டி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த (22) நடைபெற்ற பாராட்டு விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன முன்னிலையில் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க மற்றும் பிரதிமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அவர்களினால் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.