ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் பிரதமர் பதவியொன்று வழங்கப்படும் பட்சத்தில் இணைந்து கடமையாற்ற தயார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிததுள்ளார்.
கொழும்பில் இன்று வெளிநாட்டு ஊடகவியலாளர்களை சந்தித்த சந்தர்ப்பத்திலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சந்திப்பின் போது, “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் பிரதமர் பதவியொன்று வழங்கப்படும் பட்சத்தில், ஜனாதிபதியுடன் இணைந்து கடமையாற்ற தயாரா?” என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ஷ, “தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அந்த செயற்பாட்டை செய்ய முடியும் என்றால், 1970ஆம் ஆண்டு முதல் நன்றாக தெரிந்த ஒருவருடன் இணைந்து தனக்கு கடமையாற்ற முடியாத? எனத் தெரிவித்த அவர், அவ்வாறான நிலைமையொன்று உருவாகும் பட்சத்தில், அது தனது நிபந்தனைகளின் பிரகாரமே இடம்பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் அரச தலைவராகாமல், தனக்கு நாட்டை மீண்டும் ஆட்சி செய்ய முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். டைலி சிலோன்