அரசாங்கத்தின் சொத்துக்கள் தனியார் மயமாக்கப்படவோ அல்லது விற்பனை செய்ப்படவோ மாட்டாது

அரசாங்கத்தின் சொத்துக்கள் தனியார் மயமாக்கப்படவோ அல்லது விற்பனை செய்ப்படவோ மாட்டாது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் இது குறித்து எந்த தீர்மானமும் முன்னெடுக்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.

வெளிநாட்டிலிருந்து பெறப்படும் கடன்களை வைத்துக்கொண்டு அவற்றை பங்குகளாக மாற்றி மக்களின் கடன் சுமையை குறைப்பதன் ஊடாக இலங்கையை பொருளாதார மையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் வரவு செலவுத்திட்டத்தில் இருப்பதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார்

அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களில் இலாபம் பெறமுடியாமல் போன பல சவால்களுக்கு அரசாங்கம் முகங்கொடுத்திருந்த நிலையில் அதன் விளைவாக கடந்த 2014 ஆம் ஆண்டு மொத்த தேசிய உற்பத்தியில் 11 சதவீதத்தால் அரச வருமானம் குறைந்துள்ளது.

மேலும், மொத்த தேசிய உற்பத்தியில் 13.6 சதவீதம் வரை இறைவரி அறவீடு அதிகரித்துள்ளது, இவ்வாறு வரி அறவிடுவதில் ஊழல் நீக்கப்பட்டு, செயற்திறன் அதிகரித்துள்ளது என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -