சப்னி அஹமட்-
கிழக்கு மாகாணத்தின் 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் இம்முறை 749 மில்லியண் குறைந்த நிதியை மாத்திரமே ஒதுக்கியதால் கிழக்கு மாகாண உறுப்பினர்கள் பெரும் கண்டனங்களை தெரிவிப்பதுடன் மேலும் பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதில் சிரமங்கள் உள்ளது. என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் சுகாதார, சுதேச மருத்துவ நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு, சமூக நலன்புரி சேவைகள் அமைச்சின் கிழக்கு மாகாணத்திற்கான 2017ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தினை சமர்ப்பித்த பின் சபையில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
எனது அமைச்சுக்கும் அதன் கீழுள்ள நான்கு தினைக்களங்களுக்கும் அளப்பரிய பல்வேறு சேவைகளை எமது மாகாணத்தில் ஆற்றிவருகின்றோம். இவ்வமைச்சுக்கு 2016ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் சகல துறைகளுக்கும்; நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை அனைத்து உறுப்பினர்களும் இச்சபையில் ஏற்றுக்கொண்டுள்ளனர். இருந்து ஏனைய வருடங்களை விட இந்த வருடம் மத்திய அரசினால் ஒதுக்கப்பட்ட நிதிகளில் சில சிக்கல்கள் உள்ளது, இதனை நாம் ஜனாதிபதி பிரதமர் கவனத்திற்கு கொண்டுவந்து இதற்கான தீர்வினையும் பெற்றுக்கொள்வோம். கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஓர் சிறந்த பூரணமான ஓர் மாகணமாகவும் மிகவும் துள்ளியமான சுகாதாரத்துறை சேவையையும் இம்மக்களுக்கு செய்வோம் எனவும் தெரிவித்தார்.
அந்தவகையில்; மூலதனச்செலவுக்கான ஒதுக்கீடாக PSDGக்கு 333மில்லியன்களும், CBG திட்டத்திற்கு 2மில்லின்களும், மீண்டெழும் செலவுகளுக்காக 54 மில்லியன்களும், ளுர்ளுனுPக்கு 360மில்லியன்; ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வமைச்சிற்கும் ஏனைய திணைக்களங்களுக்கும் 2017ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட மூலதன ஒதுக்கீடானது இவ்வருடம் மிகவும் குறைவாகவும் உள்ளது.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களுள் மிகப்பெரிய திணைக்களமாக சுகாதாரத் திணைக்களம் காணப்படுகின்றது. இது 6171அணுமதிக்கப்பட்ட ஆளணிகளில் 5492ஆளணிகளை கொண்டு 118 வைத்தியசாலைகளினூடாகவும் 46 சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளினூடகாவும் தனது சேவையை சேவையை மாகாணத்திலுள்ள சுமார் 1.6மில்லியன் மக்களுக்கு ஆற்றி வருகின்றது. எமது மாகானத்தில் மத்திய அரசங்கத்தின் நேரடிப் பொறுப்பில் 07 வைத்தியசாலைகள் உள்ளன எனவும் தெரிவித்தனர்.
மேலும், குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி பணிக்கொடையின் கீழ் சுகாதாரத்திணைக்களத்தில் 333மில்லியன்களும், சுதேச மருத்துவ திணைக்களத்திற்கு 45 மில்லியன் ரூபாய்களும், சமூக சேவைகள் திணைக்களத்திற்கு 25மில்லியன் ரூபாய்களும், சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்புக்கு 35மில்லியன்களும், கிராமிய மின்சார வழங்கலுக்கு 08மில்லியன்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதியில் அம்பாறை,கல்முனை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய பிரதாந்தியங்களின் மக்களின் சனத்தொகைகளையும், தேவைகளையும் கருத்திற்கொண்டே ஒதுக்கப்பட்டதுள்ளது. இவ்வமைச்சிக்கான வரவு செலவுத்திட்டம் 24மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றது.