அய்ஷத்-
அட்டாளைச்சேனை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பாலமுனை பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலின் இரண்டாம் தள கட்டுமாண பணிக்காக ஜமாத்தார்களிடமிருந்து பள்ளிவாயல் நிர்வாகத்தினர் அன்ப்பளிப்புகளை கோரிவருகின்றனர். இதனையறிந்த ஒரு வயோதிபத்தாய் தான் சிறுகச் சிறுக முடிச்சுக்களில் சேர்த்த சில்லறை நாணயங்களை முடிச்சோடு நேற்று (2016.12.25) அன்பளிப்புச் செய்துள்ளார். அல்ஹம்துலில்லாஹ்.
பெறுமதியில் அது குறைவாக இருந்தாலும் அந்தத் தாயின் கூலி மகத்தானதாகும். இவ்வாறான தாராள மனங் கொண்ட தாய்மார்களின் தர்மங்களை முன்மாதிரியாகக் கொண்டு நாமும் இறை பாதையில்செலவழிப்போமாக.