சிங்கமலை காட்டுப்பகுதிக்குள் தீ : பல ஏக்கர்கள் எரிந்து நாசம்

க.கிஷாந்தன்-
ட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் டிக்கோயா நகரப்பகுதிக்கு குடிநீர் வழங்கும் சிங்கமலை பாதுகாப்பு வனப்பிரதேசத்தினுள் 22.12.2016 அன்று மாலை 6.00 மணியளவில் ஏற்பட்ட தீயினால் பல ஏக்கர்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

தற்பொழுது மத்திய மாகாணத்தில் வறட்சியான காலநிலை காணப்படுவதனால் தீ வேகமாக பரவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இத்தீயின் காரணமாக இங்கு காணப்படும் அரிய வகை தாவரங்கள் , விலங்குகள் அழிக்கப்பட்டு இருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை தீயினால் நீரூற்றுக்கள் அற்றுப் போவதனால் எதிர்காலத்தில் குடிநீர்ப்பஞ்சம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றன.

இத்தீ காட்டுமிருகங்களை வேட்டையாடுவதற்கு வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான விசாரணைகளை அட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -