அட்டாளைச்சேனை தேசியப்பட்டியல் விவகாரம்- பள்ளிவாசலின் தீர்மானத்தினை வலிமொழிகின்றேன்

றியாத் ஏ. மஜீத்-
ட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்க வேண்டும்.ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசலினால் இன்று எடுக்கப்பட்ட தீர்மானத்தை நான் வலிமொழிகின்றேன் எனவிளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமானசட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் இன்று (31) அட்டாளைச்சேனை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் பிரதி அமைச்சர் தெரிவிக்கையில்,

கடந்த பொதுத்தேர்தலின் போது கட்சியினால் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு தேசியப்பட்டியல்பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று வாக்குறுதி வழங்கப்பட்டது. அந்தவாக்குறுதியினை கட்சி தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் நிறைவேற்றுவதற்கான தருணத்தில்அவ்வாக்குறுதியினை அவர் நிறைவேற்றுவார். ஏனெனில் கட்சிக்கான இரண்டு தேசியப்பட்டியல்பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றை திருகோணமலை மாவட்டத்திற்கும் மற்றையதைஅட்டாளைச்சேனைக்கும் வழங்குவதென்று முடிவெடுக்கப்பட்டது.

அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் விவகாரத்தில் நான் தெளிவாக இருக்கின்றேன். அந்தமக்களுக்கு கட்சியினால் வழங்கப்பட்ட வாக்குறுதி உரிய முறையில் நிறைவேற்றப்பட வேண்டும்.இவ்விடயத்தில் மாற்றுக்கருதிற்கு இடமில்லை.

அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்கவேண்டும் என வலியுறுத்தி அட்டாளைச்சேனை ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் இன்று தீர்மானமொன்றைநிறைவேற்றியுள்ளது. இத்தீர்மானமானது அட்டாளைச்சேனை மக்களின் ஒட்டு மொத்த தீர்மானமாகும்.இதனை நான் வலிமொழிகின்றேன்.

கடந்த பொதுத்தேர்தலில் அட்டாளைச்சேனை மக்களின் ஆணையைப் பெற்றவன் என்ற அடிப்படையில்அம்மக்களின் எதிர்பார்ப்புக்களையும், உணர்வுகளையும் நான் நன்கறிவேன். இதனைக் கருதிற்கொண்டுகட்சித் தலைமை செயற்படும் என நம்புகின்றேன் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர், விளையாட்டுத்துறை பிரதிஅமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரியும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள்தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகச்செயலாளரும், உயர்பீட உறுப்பினருமான சட்டத்தரணி ஏ.கபூர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின்பிரத்தியோக செயலாளரும், உயர்பீட உறுப்பினருமான ஏ.எம்.வாஹிட், விளையாட்டுத்துறை பிரதிஅமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ.பாவா, கே.எம்.தௌபீக், விளையாட்டுஉத்தியோகத்தர் ஏ.எம்.எம்.றசீன், லக்கி விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் எம்.எம்.கியாஸ்தீன்உள்ளிட்ட  பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -