மட்டக்களப்பு கல்குடா தொகுதி ஓட்டமாவடி பிரதேச சபை கோறளை பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகம் புணாணை மேற்கு கிராம சேவகர் பிரிவு ஆகிய நிருவாக பிரிவுகளுக்கு உட்பட்ட கிடச்சி மடு விவசாய கிராமத்திற்கு செல்லும் விசர் ஓடை ஆற்றுக்கான பாலம் இது வரை காலமும் அமைக்கபடாமையினால் பாரிய சவால்களை குறித்த பிரதேசத்தில் விவசாயத்தில் ஈடுபடுகின்ற விவசாய சமூகம் எதிர் நோக்கி வருகின்றது.
ரெதிதென்ன புகையிரத நிலையத்திற்கு தெற்கு புறம்பாக முன்பாகச் செல்லும் விவசாயப் பாதை முடிவில் காணப்படும் குறித்த ஆற்றுக்கான பாலம் அமைத்தல் புணாணை மேற்கு ஆறு கண்டங்களில் விவசாயம் செய்யும் விவசாயிகள் அனைவரும் பெரும் நன்மையடைவார்கள்.
குறித்த பிரதேசமானது ரிதிதென்ன ஜயந்தியாய மீள் குடியேற்ற கிராமங்களை மிகவும் அண்டிய பிரதேசமாக காணப்படுகின்றது. ஆகவே குறித்த ரிதிதென்ன, ஜயந்தியாய பிரதேசகளில் மீள் குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவின் அபிவிருத்திகள் மிக முக்கியமான விடயமாக கல்குடா பிரதேசத்தில் பேசப்பட்டு வருவதினாலும், ஜெயந்தியாய கிராமத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச பல்கலை கழகத்தினை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவின் தனிப்பட்ட முயற்சியினால் அமைகப்படுவது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி நகர்வுகளில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய விடயமாக பார்க்கப்படுகின்றது.
ஆகவே விவசாயிகள் எதிர் நோக்கும் முக்கிய போக்குவரத்து பிரச்சனையாக இருக்கின்ற குறித்த கிடச்சி மடுவிற்கு செல்லும் விசர் ஓடை பாலத்தினை மட்டக்களப்பு மாவட்டத்தினை பிரதி நிதித்துவப்படுத்தும் மீள் குடியேற்ற இராஜாங்க அமைச்சர் என்ற ரீதியிலும் ரிதிதென்ன ஜெயந்தியாய பிரதேசங்களில் தனக்கென நிரந்தர வாக்கு வங்கியினை கொண்டிருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கிய அரசியல்வாதியான இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவின் கவனத்திற்கு கல்குடா விவசாய சமூகத்தின் குறித்த பிரச்சனையினை மக்களின் சார்பாக சமர்ப்பிப்பதாக சமூக ஆர்வலர் சாட்டோ வை.எல்.மன்சூர் தெரிவிக்கின்றார்.