சிலி நாட்டின் தென்மேற்கு நகரான பியூட்ரோ மான்டில் இன்று சக்கி வாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவு ஆனதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சிலி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கும்: ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவு
தென்அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டின் தலைநகர் சான்டியானோ. சான்டியாகோவில் இருந்து 655 மைல் தொலைவில் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது லேக் மாவட்டம். இந்த மாவட்டத்தின் பியூட்ரோ மான்ட்டின் தெற்மேற்கு பகுதியில் 140 மைல் தூரத்தில் உள்ள கடல் பகுதியில் ரிக்டர் அளவில் 7.6 என சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இத்தகவலை அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 9 மைல் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் உடனடியாக தெரியவில்லை.