அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களுக்கு ஒரே விதமாக வசனம் பேச முடியாத ஒரு நோய் ஏற்பட்டுள்ளதாக ராவணா பலய அமைப்பின் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர் இவ்வாறு கூறினார்.
ஹம்பாந்தோட்டையில் சீனாவுக்கு கொடுக்கப் போகும் காணியின் அளவு குறித்து ஒவ்வொரு அமைச்சரும் ஒவ்வொரு விதமாக கருத்துத் தெரிவிக்கின்றனர். அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்காகவது ஒரே கருத்து கிடையாது. அவர்கள் எவ்வளவு காணியைக் கொடுத்தாலும் பரவாயில்லை. எல்லோரும் ஒரே கணக்கை சரியாக கூற வேண்டும் எனவும் தேரர் மேலும் குறிப்பிட்டார்.