2010 ஆம் ஆண்டு சமாதானத்திற்கான நோபள் பரிசு பெற்ற சீனாவை சேர்ந்த லீ சியோபோ சிறையில் அடைக்கப்பட்டு ஏழு வருடங்கள் கடந்துள்ளன. அவரை விடுதலைச் செய்யக்கோரி ஹொங்கொங்கிலுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
சீன அரச தொடர்பாடல் அலுவலகத்தை முற்றுகையிட்டு நடத்தப்பட்டுள்ள குறித்தப் போராட்டத்தில் லீயின் விடுதலையை துரிதப்படுத்தக் கோரி சீன அரசிற்கு எதிரான கண்டனங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
2010 ஆம் சீன அரசியல் அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென கருத்து தெரிவித்து வந்தக் குற்றத்திற்காக லீ 11 வருட தண்டனைக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
2010 ஆம் ஆண்டு லீயிற்கு நோபள் பரிசு கொடுத்த காரணத்திற்காக சீனா மற்றும் நோர்வேக்கிடையிலான உறவில் விரிசல்கள் ஏற்பட்டது.
தற்போது மீண்டும் இரு நாடுகளுக்கான உறவுகள் மலரத்தொடங்கியுள்ள நிலையில் லீயையும் விடுதலை செய்யக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.