அகமட் எஸ்.முகைடீன்,ஹாசிப் யாசீன்-
நல்லாட்சி அரசின் பலஸ்தீன், இஸ்ரவேல் தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் மயக்கமான நிலைகாணப்படுவது கவலையளிக்கிறது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும்விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பாராளுமன்றத்தில் நேற்றுதெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சிக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தில் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ்நேற்று புதன்கிழமை (30) கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்படி தெரிவித்தார்.
பிரதி அமைச்சர் தொடர்ந்து பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில்,
வெளிவிவகார அமைச்சு சிறந்த முறையில் செயற்பட்டு வருதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.கடந்த மஹிந்த அரசின் முறையற்ற வெளியுறவுக் கொள்கை காரணமாக எமது நாடு ஒரு குறுகியவட்டத்திற்குள் முடக்கபட்டிருந்தது. ஆனால் தற்போதைய அமைச்சரின் செயற்பாட்டால் நாட்டிற்குசர்வதேச மட்டத்தில் நற்பெயர் கிடைத்துக் கொண்டிருக்கிறது.
இருந்தபோதிலும் பலஸ்தீன், இஸ்ரவேல் தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் மயக்கமான நிலைகாணப்படுவது கவலையாகவுள்ளது. ஏனெனில் பலஸ்தீனின் ஒருமைப்பாட்டிற்காக எமது நாடு நீண்டகாலமாக ஆதரவளித்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். எனவே பலஸ்தீன் சம்பந்தமானவெளியுறவுக் கொள்கையை அமைச்சர் மங்கள சமரவீர தெளிவுபடுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ஐரோப்பிய யூனியனின் ஜி.எஸ்.பி பிலஸ் வரிச் சலுகையினைப் பெற்றுக் கொள்வதற்கானநிபந்தனையாக முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்த அரசு விளைவதாக ஒரு சர்ச்சை இந்தநாட்டில் ஏற்பட்டிருக்கிறது. இது சம்பந்தமாக வெளியுறவு அமைச்சர் உரிய பதிலை வழங்க வேண்டும்எனவும் கேட்டுக் கொண்டார்.
இதன்போது வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவல்கள் அமைச்சர் தலதா அத்துக்கொரலபதிலளிக்கையில், ஐரோப்பிய யூனியனின் சலுகைகளுக்காக அரசு குறித்த மாற்றத்தினைஏற்படுத்துகிறது எனும் விடயத்தை மறுப்பதாகவும், ஐரோப்பிய யூனியனுக்கும் இதற்கும் தொடர்பில்லைஎனவும் தெரிவித்தார்.