அப்துல்சலாம் யாசீம்-
விஷேட தேவையுடைய சிறுவர்கள் மற்றும் வயது வந்தவர்களுக்கான இலவச வைத்திய முகாம் இன்று (29) கோமரங்கடவெல சிங்கள மஹா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
ஜரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியினால் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களமும்.சிறுவர் அபிவிருத்தி நிதியமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இவ்வைத்திய முகாமில் கோமரங்கடவெல பிரதேசத்திலுள்ள விஷேட தேவையுடையோர் 150ற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் தேவையான ஆரம்ப வைத்திய ஆலோசனைகள் விஷேட வைத்திய நிபுணர்கள் குழுவினரால் வழங்கப்பட்டது.
சிறுவர் அபிவிருத்தி நிதியத்தினால் குச்சவௌி. மொறவெவ மற்றும் கோமரங்கடவெல பிரதேசங்களில் இவ்வாறான இலவச வைத்திய முகாம்களை நடாத்த தீர்மாணித்துள்ளதாகவும் அதன் முதற்கட்டமாக கோமரங்கடவெல பிரதேசத்தில் இவ்வைத்திய முகாமினை நடாத்துவதாகவும் சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் முகாமையாளர் கே.விநோபவன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் திருகோணமலை பொது வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் சமன்த சந்ரரத்ன மற்றும் கண் விஷேட வைத்தியர். உளநல வைத்திய நிபுணர்.இயன் மருத்துவ நிபுணர் என பலரும் கலந்து கொணடனர்.