சமூக வலயத்தளத்தில் வியூகம் தொலைக்காட்சி நிகழ்வில் கலந்து கொண்டு சற்று முன்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்:
இன்று கல்முனை மாநகரில் பெரும் தொகையான மக்கள் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள். ஆனால் அதிக சனத்தொகைக்கு ஏற்றால்போல நிதிகள் வருவது போதாமல் இருக்கிறது. ஆனால் கல்முனை நான்கு சபைகளாகப் பிரிந்தால் ஒவ்வொரு சபைக்கும் போதியளவு நிதிகள் வரும் அதனை வைத்து தேவையான சேவைகளைச் செய்யலாம் எனவே பிரிப்பது என்றால் கல்முனையை நான்கு சபைகளாகப் பிரிக்கவேண்டும் என்று தெரிவித்தார்.
ஆனால் கல்முனையில் இருந்து சாய்ந்தமருதை மாத்திரம் பிரித்துக் கொடுப்பதால் கல்முனை வேறொரு முறையில் பெரும் ஆபத்தை எதிர்நோக்கும் என்பதனைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். சாய்ந்தமருது மக்கள் அவர்கள் சுதந்திரமாக வாழ விரும்புகிறார்கள் அவர்களை அவர்களுக்கான பிரதேசத்தைக் கொடுத்து பிரித்து விடுவதால் அவர்கள் சிறந்த முறையில் அதனை ஆட்சி செய்வார்கள், அதுபோன்று மருதமுனையும் சிறப்பாகச் செயற்படுவார்கள். எனவே பிவிவினையை இவ்வாறு செய்வதினை நானும் முன்னின்று செய்வதற்கு ஆயத்தமாக இருக்கிறேன். என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஜவாத் ரஷாக் தெவித்தார்.