இன்று காலை அம்பாரை மாவட்டம் இறக்காமம் பிரதேச எல்லையில் உள்ளக பிரதான வீதி ஒன்றினை புதுப்பிக்க வீதி அபிவிருத்தி போலி கொந்தறாத்து காறர்கள் தாருக்குப் பதிலாக ஒயிலும் தண்ணீரும் கலந்து போலி வேலைகள் செய்யும்போது இறக்காமத்தின் மக்களால் கையும் மெய்யுமாக மாட்டிக் கொண்டனர்.
உண்மையில் இந்த வீதி மிகவும் பழமையான வீதியாகும் அம்பாரை மாவட்டத்தில் அபிவிருத்தி செய்யப்படாத ஒரே ஒரு ஊர் இந்த இறக்காமம் ஆகும்.
அரசியல் வாதிகளாலும், கொந்தறாத்து காறர்களினாலூம் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். இவர்கள் இந்த ஊருக்கு அபிவிருத்திக்கு ஒதிக்கிய பணங்களை போலி வேலை செய்து அதிக இலாபம் ஈட்டி செல்கின்றார்கள் இந்த வீதியை காபட் வீதியாக மாற்றித்தருவதாக பல அரசியல் வாதிகள் உறுதியளித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.