எம்.வை.அமீர் -
பல்வேறு பயனுள்ள புத்தகங்களை வெளியிட்டுவரும் சமாதான கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளர், சமூக சிந்தனையாளர், கலாநிதி. எஸ்.எல்.றியாஸ் எழுதிய “Interview Techniques and Skills” எனும் புத்தகத்தின் மீள்வெளியீடு கல்முனை ஆஸாத் பிளாஷா வரவேற்பு மண்டபத்தில் 2016-12-24 ஆம் திகதி தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் எச்.எம்.நிஜாம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்குமாகாண சபை உறுப்பினர் கே.எம்.அப்துல் றசாக் அவர்களும் கௌரவ அதிதியாக உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் ஆகியோரும் பங்குகொண்டிருந்தனர். இன்றைய காலத்துக்கு மிகவும் உகந்ததாகக் கருதப்படும் குறித்த புத்தகத்தின் அறிமுகத்தை கிழக்குப்பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் பி.ரி.ஏ.ஹசன் அங்கம் அங்கமாக பல்வேறு விளக்கங்களுடன் வழங்கினார்.
நூலின் முதல் பிரதியை நூலாசிரியரின் தந்தை சுலைமாலெப்பை அவர்கள் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வின்போது கல்வியலாளர்கள், முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டு நூலைப்பெற்றுக்கொண்டனர்.