இது பற்றி கட்சித்தலைவர் மௌலவி முபாறக் தெரிவித்ததாவது, கடந்த வருடமும் இந்த வருடமும் மிக அதிகமான இந்துக்கோயில் உண்டியல்கள் உடைக்கப்பட்டுள்ளன. பல லட்சக்கணக்கான பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டும் இது விடயத்தில் அரசு பராமுகமாக செயற்படுவது கவலையானது. மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் இவ்வாறு உண்டியல்கள் உடைக்கப்பட்ட போது இதன் பின்னணியில் அரச ஒத்துழைப்புடன் பாதுகாப்பு பிரிவே செற்படுகிறது என பலராலும் சந்தேகம் தெரிவிக்கப்பட்டது. இப்போது இதற்கு காரணமானவர்கள் யார்?
தற்போது மஹிந்த காலத்தில் உடைக்கப்பட்ட கோயில் உண்டியல்களின் தொகையை விட மிக அதிகமாக உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு இந்த ஆட்சியும் அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கும் தமி;ழ் தேசிய கூட்டமைப்புமே பொறுப்பு கூற வேண்டும் என சொல்வதற்கு எந்தவொரு தமழ் கட்சியாலும் முடியாமல் உள்ளது.
ஆகவே இந்துக் கோயில்களின் உண்டியல்கள் உடைக்கப்படுவதன் மூலம் பக்தர்களின் மானசீக உணர்வில் பாதிப்பை ஏற்படுத்துவதாலும், இதன் மூலம் இந்துக் கோயில்கள் அவமானப்படுத்தப்படுவதாலும் முஸ்லிம் சமயத்தலைவர்களை தலைமையாக கொண்ட கட்சி என்ற வகையில் உலமா கட்சி இதனை வன்மையாக கண்டிப்பதுடன் இது விடயத்தில் அரசு தலையிட்டு கொள்ளையர்களை கைது செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசை கேட்டுக்கொள்கிறது.