ஊடகப் பிரிவு-
ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகவே இந்த உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. இதனை கொண்டு அவர்கள் சுயதொழில் ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் வருமானங்களை ஈட்டி வறுமையின்றி வாழ வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாகும்.
மட்டக்களப்பு மாவடத்தின் செங்கலடி பிரதேச செயலக நடைபெற்ற வாழ்வாதாரண உபகரணம் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் அமீர் அலி மேற் கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
வாழ்வாதார உபகரணத்தை பெற்று செல்லும் ஒவ்வொரு பயனாளிகளும் தங்களது சுய தொழில் மூலம் அதிகளவான வருமானத்தை ஈட்டி தங்களது வாழ்க்கை தரத்தை முன்னேற்ற வேண்டும்.இங்கு வழங்கி வைக்கும் வாழ்வாதார உபகரணங்களை விற்று விடாமல் சுய தொழிலை திறன்பட செய்து எதிர்காலத்தில் நீங்களும் இதே போன்று வாழ்வாதார உபகரணங்களை மற்றயவர்களுக்கு வழங்கி உதவி செய்யும் அளவிற்கு உங்களது வாழ்வாதாரம் உயர வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன். எனவும் தனது உரையில் தெரிவித்திருந்தார்.
இந்நிகழ்விலே பிரதேச செயலாளர் உதயஸ்ரீ, பிரதேச செயலக உதவி திட்டப்பணிப்பாளர், அதிகாரிகள் மற்றும் பயனாளிகளும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் 1.5 மில்லியன் பெறுமதியான வாழ்வாதார உபகரணங்களை வழங்கி வைக்கப்பட்டது.