எஸ்.அஷ்ரப்கான்-
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் மாதாந்த பொதுக் கூட்டம் 25.12.2016 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு மருதமுனையில் நடைபெற்றது.
போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஏ. பகுர்தீன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு சகல அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இக் கூட்டத்தின்போது, போரத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும், அங்கத்தவர்களின் நலன்கள் தொடர்பாகவும் மிக முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை போரத்தின் மருதமுனை அங்கத்தவரான ஏ.எல்.எம். சினாஸ் மிகச் சிறப்பாக மேற்கொண்டிருந்தார்.