ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளையின் சார்பாக ( 24 ) நடைபெற்ற மாபெரும் டெங்கு ஒழிப்பு செயற்திட்டம் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
இதன் போது டெங்கு நோயின் இருந்து பாதுகாக்கும் முறைகள் பற்றி பொது மக்களுக்கு துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. மேலும் டெங்கு நுளம்புகள் பெருகும் குப்பைகளை காரைதீவு நகரசபை குப்பை வண்டிகள் மூலம் அகற்றப்பட்டன.
மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த இவ் வேளைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய காரைதீவு நகரசபை, பொதுசுகாதார அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு SLTJ சாய்ந்தமருது கிளையினர் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.