மட்டக்களப்பு சுமண தேரர் தமிழ் அரச அதிகாரியை தூசித்தமைக்காக அவர் கைது செய்யப்பட வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடிதம் எழுதியிருக்கும் நிலையில் மேற்படி தேரர் மட்டக்களப்பு சிங்கள மக்களின் பிரதிநிதி என நீதி அமைச்சர் விஜேதாச சொல்லியிருப்பதன் மூலம் தமிழ் பேசும் மக்களை மட்டுமல்ல தனது அமைச்சரவை அமைச்சர் மனோ கணேசனையும் கொச்சைப்படுத்தியுள்ளார் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது
மட்டக்களப்பு சுமண தேரரின் அட்டகாசம், அதன் பின் ஞானசாரர் மட்டக்களப்புக்கு போகப்போவதாக அறிவித்ததும் ஆசாத் சாலி அதற்கெதிராக பொலிசில் தடை செய்யச்சொல்லி அது விடயத்தை முஸ்லிம்கள் தலைமீது போட்டமை, பொலிஸ் தடையை மீறி ஞானசார மட்டக்களப்புக்கு படையெடுத்து இடையில் மறித்து நீதி மன்ற உத்தரவை கிழித்து வீசி விட்டு திரும்பியமை, பின்னர் நீதி அமைச்சர் விஜேதாச, ஞானசார, சிங்ஹ லே, ராவண பலயவை அழைத்துக்கொண்டு மட்டக்களப்புக்கு அரச மரியாதையுடன் சென்றமை, மட்டக்களப்பு சிங்கள மக்களுக்கு மாகாண சபை , பாராளுமன்ற உறுப்பினர் இல்லை என்று சொன்னமை, சுமண தேரர் மட்டக்களப்பு சிங்கள மக்களின் பிரதி நிதி என நீதி அமைச்சர் சொன்னதன் மூலம் மட்டக்களப்பு தமிழர்கள் அவர் விடயத்தில் அடங்கியிருக்க வேண்டும் என மறைமுகமாக எச்சரித்தமை என இவையெல்லாம் தற்செயலான நிகழ்வுகள் என ஒருவன் நினைத்தால் அவன் மிகப்பெரிய முட்டாள். அனைத்தும் கச்சிதமாக அரச ஆதரவுடன் திட்டமிட்டு நடை பெற்றவையாகும் என்பதை அரசியல் அறிவுள்ள எவனும் மறுக்க மாட்டான்.
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஒரு ஜென்டில் மேன் அரசியல்வாதியாகும். தனக்கு பிடித்ததையும் பிடிக்காததையும் நேரடியாக சொல்லக்கூடியவர். முதுகில் குத்தும் வழக்கம் அவரிடம் ஒரு போதும் இருந்ததில்லை. பெரும்பாலான முஸ்லிம்கள் எனக்கு புரியாணி போடுவார்கள் ஓட்டு போடமாட்டார்கள் என பகிரங்கமாக சொன்னவர். அப்படியிருந்தும் முஸ்லிம்களுக்கு பல சேவைகளை செய்தவர்.
தமிழர்கள் தனக்கு வாக்களிக்க மாட்டார்கள் என நன்கு தெரிந்தும் வடக்கு கிழக்கில் பாரிய அபிவிருத்திகளை செய்தவர். 2005 முதல் அவருக்கு ஆதரவாக செயற்பட்ட உலமா கட்சியை அதன் பின் பதவிக்காக அவரிடம் ஒட்டிய சில அரசியல்வாதிகளின் கோள் பேச்சைக்கேட்டு சமூகம் சம்பந்தமான விடயங்களில் எம்மை ஓரம் கட்டிய விடயத்தில் எமக்கு அவருடன் மன வருத்தம் இருந்த போதும் அவர் இந்த நாட்டின் மிகச்சிறந்த சிங்கள ஜனநாயக தலைவர் என்பதில் எம்மிடம் மாற்று கருத்து இல்லை.
மஹிந்தவின் காலத்தில் இப்போது நல்லாட்சி அரசு சிறுபான்மை மக்களின் தன்மானத்துக்கெதிராக சூழ்ச்சி செய்வது போன்று செயற்படவில்லை. பொதுபல சேனா போன்ற தீவிரவாத அமைப்புக்களை கட்டுப்படுத்த கொஞ்சம் அவகாசம் தரும்படி மஹிந்தவும் பெசில் ராஜபக்ஷவும் கோரியிருந்ததை முஸ்லிம் சமூகத்தின் அரைவாசிப்பேராவது ஏற்று அவருக்கு வாக்களித்திருந்தால் இன்றைய தந்திரங்களுக்கு நாம் தலை குணியும் நிலை வந்திருக்காது.
முபாறக் மௌலவி,
தலைவர் -முஸ்லிம் உலமா கட்சி.