பாறுக் ஷிஹான்-
யாழ் சாவகச்சேரி மட்டுவில் பிரதேச பன்னிரண்டு முன்பள்ளி பாடசாலைகளை ஒன்றிணைத்து மட்டுவில் குடும்ப முன்பள்ளிகளுக்கான கலைநிகழ்வும் மற்றும் பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்று 923) மாலை 3 மணியளவில் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பானரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் கலந்து சிறப்பித்தார் .
இதன் போது கலைநிகழ்வில் திறமைகளை காட்டிய மாணவ மாணவிகளிற்கு பரிசில்களை பிரதம அதிதியினால் வழங்கப்பட்டது. அத்துடன் ஆரம்ப கல்வியினை மாணவ செல்வங்களுக்கு உரிய முறையில் வழங்குவதன் அவசியத்தை அவர் அங்கு வலியுறுத்தினார்.