மீராஷாகிப் சைனுதீன் - கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக தாண்டியடி கிராமத்தில் “செரண்டிப்“ சமுக அமைப்பும் கல்குடா ஷக்காத் நிதியமும் இணைந்து அமுல் படுத்தி வந்த சகல வசதிகளையும் கொண்ட ”மரியம் மாதிரிக் கிராமம்” வீடற்ற வறிய மக்களுக்கான வீட்டுத்தொகுதி நிறைவு பெற்று அதனை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் வெளிநாட்டு கொடையாளிகள்,பிரதேச செயலாளர் நிஹாறா,கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சின் பிரத்தியோக செயலாளர் தௌபீக் மற்றும் வாழைச்செனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துபுட்டுமுன.மயிலன்கரச்சி விகாராதிபதி தியாவட்டவான் அருட்தந்தை,கல்குடா ஷக்காத் நிதிய உறுப்பினர்கள், ஊர்பிரமுகர்கள். நலன் விரும்பிகள் பயனாளிகள், என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஆனால் அரசியல்வாதிகள் யாரும் தொடர்பு படாமல் கட்டி முடிக்கப்பட்டு மக்களிடம் ஒப்படைக்கப் பட்ட இவ்விட்டுத்திட்டம் வெற்றியுடன் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.