ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் - சென்னை உயர்நீதிமன்றம்

ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பில் இருந்தும் கூறப்பட்டு வந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றமும் இந்த கருத்தினை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 22ம் திகதி முதல் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி கடந்த 5ம் திகதி காலமானார்.

சிகிச்சை பெற்றபோது இவரது புகைப்படங்களோ, வீடியோக்களோ வெளியாகவில்லை.

ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது அல்ல, திட்டமிட்ட கொலை என கூறப்பட்டு வரும் நிலையில் சென்னை உயர்நீதிமன்றமும் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா மரணத்துக்கு நீதி கோரும் மனுவை இன்று விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், இறந்து போன ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -