ஊடகப்பிரிவு-
இன்றைய கால கட்டத்தை பொறுவத்தவரை கல்விக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பெற்றோர்கள் ஒவ்வொரு வரும் தம் பிள்ளைகளைகள் மீது அதிக நம்பிக்கை வைத்து அவர்களை தட்டி கொடுப்பவர்களாக இருக்க வேண்டும்.
இன்றைய தினம் கிராமிய பொருளாதார அமைச்சின் கீழ் வாழ்வாதாரன உபகரணம் வழங்கும் நிகழ்வு கோரளை பற்று கிரான் பிரதேசத்தில் நடை பெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிராமி பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி உரையாற்றுகையிலே மேற் கண்டவாறு கூறினார்.
பிரதி அமைச்சர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஒரு பிள்ளையை பார்த்து அவனுக்கு ஆங்கிலம் விளங்கவில்லை, கணிதம் விளங்கவில்லை,விஞ்ஞானம் விளங்கவில்லை என்று ஒரு பெற்றோர் அல்லது ஆசிரியர் கூறுவாராயின் அந்த பெற்றோரோ அல்லது ஆசிரியரோ தன்னம்பிக்கை இல்லாதவர்கள் என்பதே வெளிப்படையான உண்மையாகும்.
ஒவ்வோர் பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அவர்களை தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்தி அவர்களது எதிர்காலத்தை பிரகாசமாக்க வேண்டும்.
தன்னம்பிக்கைக்கு சான்றாக நான் இந்த இடத்திலே இந்த உலகே அன்னாந்து பார்க்கும் சாய் கோபுரத்தை அமைத்த ஐமனின் கதையை ஞாபக மூட்டுகின்றேன்.
பிரான்ஸ் நாட்டிலே இருக்கும் சாய் கோபுரத்தை அமைத்த ஐமனுக்கு கணிதம் சரியாக புரியவில்லை எனவே பாடசாலை நிர்வாகம் ஐமனுடைய தாயை அழைத்து அவனை வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு கேட்டுக் கொள்கிறார்கள். அந்த தாய் ஐமனை அழைத்து செல்லும் போது தன்ம்பிக்கையோடு கூறுகிறாள் வா! மகனே நான் உன்னை மனிதனாக்கி காட்டுகின்றேன். ஐமன் பாடசாலையை விட்டு போகும் போகு பாடசாலைச் சுவரிலே ஒரு வாசகத்தை எழுதி விட்டு செல்கின்றான். ”பாடசாலையை விட்டு செல்கின்றேன் விடாமுயற்சி வெற்றி தரும்” அந்த நம்பிக்கை இன்று ஓர் உலக அதிசயத்தை தந்திருக்கிறது.
எனவே முதலில் பெற்றோர் கனவு காண வேண்டும் தன் பிள்ளைகள் வைத்தியராக, பொறிளியலாளராக, வக்கீலாக, விரிவுரையாளராக, ஆசிரியராக வர வேண்டும் என அப்போதுதான் அந்த கனவினை இறைவன் நிறை வேற்றுவான்.
இன்றைய காலகட்டத்தை பொறுத்தவரை அதிகமான பெற்றோர்கள் வறுமையை காரணம் காட்டி தம்பிள்ளைகளின் கல்வியை வீணாக்குகின்றனர் ஆனால் வறுமை என்பது கல்விக்கு ஓர் தடையல்ல. வறுமையில் இருந்து கல்வி கற்பவனே அதிகம் சாதனையாளன் ஆகின்றான். எமது நாட்டிலே இருக்கும் அதிகமான அரசாங்க அதிகாரிகள், உத்தியோகத்தர்களின் அடிப்படையை பார்த்தால் அவர்கள் வறுமையிலேயே இருந்திருப்பார்கள். எனவே சாதனையாளனுக்கு வறுமை பொருட்டல்ல. என தனது உரையில் கூறி இருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.