இலங்கையில் சுற்றுலா மேலாண்மை அங்கீகாரம் முதன் முறையாக வெளியீடு..!

சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளின் எழுச்சிக்காகவும் அதனை ஒரு தகுதிசார் தொழில் துறையாக முன்னெடுப்பதற்கு இலங்கையில் தொழில்முறைமேலாண்மை அங்கீகாரம் முதன்முறையாக வெளியிடப்பட்டது. இந்த அங்கீகாரம் 'சான்றளிக்கப்பட்ட விருந்தோம்பல் நிதி மற்றும் மேலாண்மைக் கணக்கியல் நிறுவனத்திற்கே' வழங்கப்பட்டது.

இவ் அங்கீகாரத்திற்கான அங்குரார்ப்பண அமர்வானது கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழ் இயங்கும் பட்டய மேலாண்மைக் கணக்கியல்நிறுவனம் மற்றும் அதன் தகுதியினை பெற்ற சான்றளிக்கப்பட்ட விருந்தோம்பல் நிதி மற்றும் மேலாண்மைக் கணக்கியல் நிறுவனத்தின்தலைமையில் கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்றது. 

சான்றளிக்கப்பட்ட விருந்தோம்பல் நிதி மற்றும் மேலாண்மைக் கணக்கியல் ஒரு மூன்று ஆண்டு திட்ட கூட்டு அமர்வில் சுற்றுலா அபிவிருத்திமற்றும் கிருஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவும் கலந்துக்கொண்டார்.

இவ் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்ட கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உரையாற்றுகையில்தெரிவித்ததாவது: புதிய சான்றிதழின் நிமித்தம் விருந்தோம்பல் துறை தகுதிவாய்ந்த தொழில் துறையாக திகழும். இலங்கையில் விருந்தோம்பல்தொழிற்துறை மூன்றாவது மிகப் பெரிய அந்நிய செலாவணியை ஈட்டுவதுடன் வளரும் ஒரு துறையாக இருக்கிறது. சுற்றுலாத் துறை உலகின்குறைந்தளவு செலவில் அதிக லாபம் தரும் துறையாக உலகம் பூராவும் உணரப்பட்டுள்ளது. 

இலங்கையின் பொருளாதாரத்தினுள் அந்நியசெலாவணி உழைப்பதில் பிரதான துறையாக சுற்றுலாத் துறை உள்ளது. இலங்கைக்கு அந்நிய செலாவணியினை இலகுவாக பெற்றுக் கொள்வதற்குவாய்ப்பாக உள்ள துறையாக முக்கியத்துவம் பெறுகின்றது. 2020 ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 3.5 மில்லியனை தாண்டும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் விருந்தோம்பல் துறையில் நேரடி தொழிலுக்கு 250,000 பேர் எதிர்பார்க்கப்படுகிறது. 

பட்டய மேலாண்மைக்கணக்கியல் நிறுவனம் எனது அமைச்சின் கீழ் இயங்குகின்றது. விருந்தோம்பல் துறைக்காக சிறப்பு வாய்ந்த நிதி மற்றும் மேலாண்மைக்கணக்கியல் திட்டத்தினை இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனமும் இணைந்து அறிமுகம் செய்தது. நிதி மற்றும்மேலாண்மை கணக்கியல் துறை மீது இவ்விரு நிறுவனங்களுக்கடையிலான முயற்சியானது தகுதிவாய்ந்த திறமையான தொழில்நெறிஞர் மத்தியில்வளர்ந்து வரும் தேவைகளை பூர்த்தி செய்ய உதவுதல் விருந்தோம்பல் துறை பாராட்டுக்குரியது. 

முடிவெடுத்தல் மற்றும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கான நிதி மற்றும் மேலாண்மை செலவு கண்டறிந்து கொள்வதற்கு சிரேஷ்ட நிர்வாக மட்டங்களில் உள்ளவர்களுக்கு இந்த நிகழ்ச்சி திட்டம் நன்மையானது என்றார் அமைச்சர் ரிஷாட்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -