பெரும்பாலான முஸ்லீம் பெற்றோா்கள் சிங்கள மொழி மூலம் கற்பதற்கே விண்ணப்பிப்பிக்கின்றனா்.!

அஷ்ரப் ஏ சமத்-
கொழும்பின் இதயமான குணசிங்கபுரவில் தணியாா் பஸ் நிலையம் மற்றும் , குணசிங்க புர பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவும் செல்லும் பாதையில் சகல வசதிகளையும் கொண்ட 1 ஏக்கா் நிலப்பரப்பில் மிகவும் அமைதியான சூழ்நிலையில் 25 வகுப்பறைகளைக் கொண்ட ஏ. ஈ. குணசிங்க வித்தியாலயம் உள்ளது. இங்கு 80 மாணவா்களைக் மட்டுமே கல்வி கற்கின்றனா்.. ஆனால் இங்கு 1000 மாணவா்கள் கற்கக் கூடிய வசதி வாய்ப்புக்கள் இங்கு உள்ளன. ஆனால் கொழும்பு வாழ் பெற்றோா்கள் தமது பிள்ளைகளை இங்கு சோ்ப்பதற்கு முன்வருவதில்லை. 

இப் பாடசாலை முன்னாள் ஜனாதிபதி ஆர் பிரேமதாச வின் முயற்றிசியினால் 35 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரும் 1995லும் இப் பாடசாலை குணசிங்க புர தொடா்மாடி அபிவிருத்தி செய்யும் போது மேலதிக கட்டிட வசதிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இப் பாடசாலையை அண்டி வாழ் தமிழ் முஸ்லீம் குடும்பங்கள் இப் பாடசாலையில் அக்கரை காட்டவில்லை. இப்பிரதேச வாழ் மாணவா்கள் . துார மற்றும் பிரபல்ய அரச பாடசாலைகளுக்குச் செல்கின்றனா். சிலா் சர்வதேச பாசடாலையில் தமது பிள்ளைகளை சோ்த்துவிடுகின்றனா். ஆனால் அரசினால் பாடசாலை சீருடை, இலவசக் கல்வி, இலவச புத்தகங்கள் அரசினால் பயிற்றப்பட்ட ஆசிரியா்கள் சேவையை பெற்றுக் கொள்ளாமல் உள்ளனா். 

1 ஏக்கா் நிலத்தில் இப்பாடசாலை அமையப்பெற்றுள்ளது. ஆனால் இப்பாடசாலை 1ஆம் ஆண்டு தொடக்கம் 11ஆம் ஆண்டுவரை சிங்கள மொழி மூலம் கற்பிக்கப்படு கின்றன. 

ஆனால் இங்கு கொழும்பில் வாழும் பெரும்பாலான முஸ்லீம் பெற்றோா்கள் சிங்கள மொழி மூலமே தமது பிள்ளைகளை 1ஆம் ஆண்டுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பிப்பிக்கின்றனா். ஆனால் கொழும்பில் உள்ள தெமட்டக் கொட கைரியா பாடசாலை மற்றும் பாத்திமா மகளிா் கல்லுாாி பம்பலப்பிட்டி முஸ்லீம் மகளிா் கல்லுாாி மூன்று பாடசாலைகளிலும் பெரும்பாலான பெற்றோா்கள் சிங்கள மொழி மூலம் அனுமதி கேட்டு 1000க்கும் மேற்பட்டோா் விண்ணப்பிக்கின்றனா் இம் மூன்று பாடசாலைகளிலும் சிங்கள மொழி மூலம் 400 மாணவிகளுக்கே அனுமதி கிடைக்கப் பெருகின்றன. 

அனுமதி கிடைக்காத 600க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு அரச பாடசாலைகளில் கற்பதற்கு வாய்ப்பில்லை. இவ்வாறான பிள்ளைகளின் பெற்றோா்கள் மிகவும் கஸ்டத்தில் மத்தியில் சர்வதேச பாடசாலைகளில் 50 ஆயிரம் - 1 இலட்சம் ருபா முற்பணம் மற்றும் மாதாந்தம் 5ஆயிரம் செலுத்தி தணியாா் பாடசாலைகளில் தமது பிள்ளைகளை சோ்த்து விடுகின்றனா். அ்ஙகு. 1-4 வருடங்கள் கற்று விட்டு பிள்ளைகள் தமது கல்வியை பொருளாதார நிலைமை காரணமாக தொடர முடியாத நிலையில் இடை நடுவில் கல்வியை விட்டு விடுகின்றனா். மீண்டும் இவ்வாறான பிள்ளைகளின் பெற்றோா்கள் கொழும்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பிணா்கள், கல்வியமைச்சுக்கள், ,மேல்மாகாண சபை உறுப்பிணா்களையும் நாடி அரச பாடசாலைகளில தமது பிள்ளைகளை சோ்த்துக் கொள்வதற்காக சிபாா்சுக் கடிதம் கேட்டும் மற்றும் கல்விக்காரியாலயங்களின் படிகளை ஏறி ,இறங்குகின்றனா். 

மேல் மாகாணசபையின் கீழ் உள்ள ஏ.ஈ. குணசிங்க பாடசாலை மேல் மாகாணசபை நிர்வாகத்தின் கீழ் உள்ளது. கொழும்பில் உள்ள மேல் மாகணசபை உறுப்பிணா்கள் மேலும் ஆசிரியா் பற்றாக்குறையை நிவா்த்தி செய்து இப் பாடாசலைய மேலும் அபிவிருத்தி செய்வதற்கு தயாராக உள்ளதாக மேல் மாகாணசபை உறுப்பிணா் அர்சத் நிசாமுத்தீன் தெரிவித்தாா். 

கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரஹ்மான் மற்றும் கொழும்பு மாவட்ட அபிவிருத்தி முன்னேற்ற ஒன்றியதின் செயலாளருமான சிரேஸ்ட சட்டத்தரணி யு.எல். நஜீம் இணைந்து தணியாா் உதவியுடன் 10 மில்லியன் ருபா நிதியிணை முஸ்லீம் தனவந்தா்ிடம் திரட்டி ஏ.ஈ. குணசிங்க பாடசாலையை அபிவிருத்தி செய்துள்ளனா்.

ஆகவே சிங்கள மொழி மூலம் ஆண்டு 1க்கு அனுமதி பெற இப்பாடசாலையில் வசதி வாய்ப்பு உண்டு இங்கு அனுமதிக்காக தமது பிள்ளைகளை சோ்க்கும் படி பாராளுமன்ற உறுப்பிணா் கொழும்பு வாழ் முஸ்லீம் பெற்றோா்களை வேண்டுகின்றனா். அடுத்த 5 ஆண்டுகளுக்கு 1ஆம் ஆண்டு தொட்க்கம் 5 ஆண்டு வரை ஒரு தரமாண மகளிா் கல்லுாாியாக இதனை கட்டி எழுப்புவதற்கு கொழும்பு வாழ் முஸ்லீம் பெற்றோா்கள் ஒத்துழைக்கும்படியும் வேண்டிக் கொண்டாா்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -