முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் மகன் ஜோஹன் பெர்னாண்டோ வடமேல் மாகாண சபையில் அவர் வகித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். வடமேல் மாகாண சபையின் ஆலோசகர் மற்றும் பிரதம கொரடாவாக ஜோஹன் பெர்னாண்டோ பணியாற்றி வந்த நிலையில், அந்தப் பதவியிலிருந்து நேற்று நீக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட வாசிப்பில் கலந்துக் கொள்ள தவறியமையினாலேயே இவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்ட வாசிப்பு நான்கு நாட்கள் இடம்பெற்ற நிலையிலும் ஜோஹன் பெர்னாண்டோ கலந்துக் கொள்ளவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதியிடம் அறிவிக்க உள்ளதாக வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க கூறியுள்ளார். மேலும் வடமேல் மாகாண சபையின் புதிய கொரடாவாக பண்டார ராஜபக்ஸ நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.