பாறுக் ஷிஹான்
யாழ்ப்பாணம் வேலணை மண்கும்பான் ஜும்மா பள்ளிவாசலில் அண்மைக்காலமாக நிர்வாகச் சீர்கேடுகள் இடம்பெறுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இப்பள்ளிவாசல் நிர்வாகத்தில் உள்ளவர்களது அசமந்தத்தினால் பள்ளிவாசல் சூழல் அசுத்தமடைந்து காணப்படுகின்றமை,அங்குள்ள அறை வாடகை குறித்து தெளிவற்ற நோக்கு,மலசல கூட வசதி உரிய பராமரிப்பு இன்மை காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் இப்பள்ளிவாசலில் 8 அறைகள் உள்ளன.மேலும் தென்னை மரங்கள் 20 க்கு மேற்பட்டவைகள் உள்ளன.இதனால் பெறப்படும் வசுல்கள் தொடர்பில் முறையான கணக்குகள் இதுவரை இல்லை.இதன் காரணமாக இப்பள்ளிவாசலிற்கு நிரந்திரமாகவோ தற்காலிகமாகவோ மௌலவி ஒருவரை நியமிக்க தற்பாதைய நிர்வாகம் திணறி வருகின்றது.
இது குறித்து பள்ளிவாசல் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்ட போதிலும் எவ்வித பயனும் இல்லை.வரலாற்று முக்கியத்துவம் மிக்க இப்பள்ளிவாசல் முகப்பு உடைந்து விழும் நிலையில் உள்ளது.இது உடைந்தால் பல உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
மக்கள் இப்பள்ளிவாசல் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.