இந்தியாவின் தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை கவலைக்கிடமாகவுள்ளது என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து கண்காணித்து, சிகிச்சை அளித்து வருகிறோம்’ என, சென்னை அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இன்று பகல், 12:40 மணிக்கு அப்பல்லோ வைத்தியசாலையின் தலைமை செயல் அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் வெளியிட்ட அறிக்கையில்,
நேற்று மாலை மாரடைப்பால் பாதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.
அவருக்கு எக்மோ கருவி மற்றும் பிற உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
வைத்திய நிபுணர் குழுவினரால் அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.