சகோதரனே!!! இன்று வெகுவாக பேசப்படுகின்ற தேசிய பட்டியல் விவகாரத்தில் அட்டாளைச்சேனை என்கின்ற என் அயல் கிராமத்தின் யாரவது ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் என எழுப்பப்படும் கோசங்களும், இல்லை தனிநபர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்பும் ஒரு புறம் இருக்க, இல்லை கட்சித் தலைமை எடுக்கின்ற முடிவுகளின் பிரகாரம் செல்ல வேண்டுமெனவும் கோசம் எழுப்பபடுகிறது.
இவ்வாறு சமுக சிந்தனைகான அரசியல் தளத்தை அந்த கட்சியின் இயங்கு நிலையை வீணாண தேசிய பட்டியல் வாதங்களின் பதவி நிலை உறுதி மொழிகளால் எத்தப்படுகின்ற நிலை ஏன் என் அயலவனுக்கு வர வேண்டும். என் அயலவன் யார்? பாரளுமன்றத்த உறுப்பினர் டாக்டர் ஜலால்தீனை அந்த கெளரவமிக்க மனிதப் பண்பாளனை சுமந்த மண். தனக்கு பதவி தொடர்பான பிரச்சினை எழுந்த போது அவன் அவனது ஊர் என்று பார்க்காமல் தன் அயலவனுக்காக உதுமாலெப்பை பொத்துவில் முதல்வர் சிபார்சு செய்து வாழ்ந்து அந்த கூட்டிணைவை உருவாக்கி காட்டியவன்.
இன்று எத்தனை வருடங்களாக இலவு காத்த கிளி போல இதற்காக அலைக்கழிக்க படுகின்றீர்..? கடந்த நாடாளுமன்ற தேர்தல் வேட்பு மனு நேரத்தில் குறிப்பிட்ட தேசிய பட்டியல் விவகாரத்தின் போது அட்டாளைச்சேனை ஊருக்கு தேசிய பட்டியல் தருவதாக கூறிய தலைவர் இன்று மாவட்டங்களே பாராளுமன்ற உறுப்புரிமை இன்றி இருக்கின்றதாக சொல்கின்றார். அப்போது அவரிடம் நீர் வாக்களித்தவன் என்ற வகையில் இவற்றை கேட்கலாம்.
1.சென்ற பாரளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை அட்டாளைச்சேனை சேர்ந்த எவருக்காவது வழங்கி இருக்க வேண்டும்?
2.ஹசனலி தேசிய பட்டியல் கேட்பார் அல்லது வழங்க வேண்டுமென்றால் அவரை போட்டியிடச் செய்து அந்த வெற்றிடத்தை அட்டாளைச்சேனை நிரப்பி இருக்க வேண்டும்
3.வாக்குறுதியை இந்த மக்களின் முன் தேவையில்லாமல் வழங்கி இருக்க கூடாது.
எனவே இவ்வாறான கேள்விகளினால் நீர் அதிகமாக நம்பிக் கொண்டிருக்கும் தலைமை என்ன விடையளிக்க போகிறது, என அறிவார்ந்த மனச்சாட்சி உள்ள சகோதரனாய் சிந்தித்துபார். சகோதரனே!!!!
அவசரவமாக உமக்கு வழங்கப்பட்ட மாகாண அமைச்சு விடயத்தில் எவ்வாறு உமது கவனம் திசை திருப்பப்பட்டிருக்கிறது என எண்ணிப்பார். என் அக்கரைப்பற்று உனது ஊரின் மூவாயிரம் வாக்குகளால் பாரளுமன்றத்தில் நுழைந்ததை நாம் மறந்து விடவில்லை. அதே போல நாம் சுமார் இருபதாயிரம் வாக்குகளை வழங்கி இன்று நீர் பெற்றிருக்கும் மாகாண அமைச்சை இரு முறை தரவில்லையா?
மூவாயிரம் வாக்குகளால் உமதூர் பெற்றுக் கொண்ட வளத்தை முழுமையாக இம் மாவட்டத்தின் அதி கூடிய வாக்களித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆக்கி இவர்களை அழகு பார்த்த என் அயலவனை இவ்வாறு சிலரின் சுய நலத்துக்காக காவு கொடுத்ததை எனதயலவன் அறிய மாட்டானா?
நாம் இன்றும் ஓர் உடலாய் அமைந்த பத்து ஊரின் இருவராய் இருப்போம். பிரதேச வாதத்தின் அடி நாதமாய் உன்னையும் என்னையும் எங்கோ இருந்து வந்தவனாய் பிளவுபடுவதை புரிந்து கொள் அக்கரைப்பற்று மண்ணில் பிறந்தவனால் அவன் ஸ்தாபித்த கட்சியினால் உமதூர் அடைந்த கொண்ட அபிவிருத்தி தொடர்பில் சிந்தித்துபார்.
அவன் தாய் கட்சி தலைவனின்றி எம் சமுகத்தை சர்வதேசத்திடம் அடகு வைத்து எம்மை குழுவாக கையெழுத்திட்ட வேளை அணைத்தையும் உதறி வெளியேறிய போது இது எம் சமுகத்திற்கான பயணம் என்பதை பறை சாற்றி தளபதியாய் எழுந்தவன் உமதூர் உதுமாலெப்பை என்பதை நாம் மறுக்கவும் இல்லை மறக்கவும் மாட்டோம், பின்னர் நிகழ்ந்த பிளவுகளெல்லாம் தேசிய பட்டியலுக்காக பதவிகளுக்கா நிகழ்ந்தவை நாம் ஆரம்பித்த பயணம் இன்னும் மாற்றங்களுடனும் உண்மைகளும் வெளி வராமல் இல்லை வாக்குறுதிகளால் ஏமாற்றம் அடைந்த ஊரானின் கவனத்துக்கு, வாக்குறுதியளிக்காமலே உம்மை தாங்கி நிற்க அயலவன் உண்டன்பதை நீ உணர்ந்து கொள்வாய் என மிக ஆளமாக நம்புகிறேன்.