உலகில் பல இடங்களிலும் முஸ்லிம்கள் தாக்கப்படுவதனை கண்டித்து அக்கரைப்பற்றில் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பேரணியானது இன்று ஜூம்மா தொழுகைக்கு பின்னர் நடத்தப்பட்டது.
இவ்வார்ப்பாட்ட பேரணியானது பள்ளிவாசலில் இருந்து ஆரம்பமாகி கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் பதாதைகளை ஏந்தியவாறும் சென்று அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் அனைவரும் ஒன்று கூடி துஆ செய்தனர்.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கருத்து தெரிவிக்கையில், உலக முஸ்லிங்களுக்கான கொடுமையினை பார்த்து விட்டு வெறுமனே இருந்து விட்டு போகாமல் அவர்களுக்கான எமது முழு ஆதரவினையும் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக இன்று இந்த ஆர்ப்பாட்ட பேரணியினை செய்திருக்கின்றோம்.
நாங்கள் எப்பொழுதும் துன்பப்பட்டுக்கொண்டிருக்கும் எமது சகோதரர்களுடன் கூடவே இருக்கின்றோம். அவர்களுக்காக நாங்கள் இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
பல நாடுகளிலிலும் முஸ்லிங்களுக்கு எதிராக பல வன்முறை சம்பவங்கள் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் வருகின்றது.
அதனை கண்டும் காணாமலும் ஒரு சராசரி மனிதராக இராமல் நாமும் அவர்களுக்காக இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
முஸ்லிங்களுக்கு எதிராக நடைபெறும் அநியாயங்களை முஸ்லிம் நாடுகளும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள் அவர்களுக்கு எதிராகவும் நாங்கள் இன்று இந்த பேரணியை செய்திருக்கின்றோம் என கூறினார்கள்.