கல்முனை ஆயுர்வேத வைத்தியசாலை அபிவிருத்தி – பிரதி அமைச்சர் ஹரீஸ் நடவடிக்கை

அகமட் எஸ்.முகைடீன், காசிப் யாஸீன்-
ல்முனை ஆயுர்வேத வைத்தியசாலையில் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வகையில் விடுதிவசதியுடன் கூடிய வைத்தியசாலையாக செயற்படுவதற்கான நடவடிக்கையினை ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் மேற்கொண்டுள்ளார்.

பிரதி அமைச்சர் ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் கல்முனை சாஹிபு வீதியில் குறித்த வைத்தியசாலைக்கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இவ்வைத்தியசாலையினை இயங்கச் செய்வதற்கு ஏற்ற வகையில் உள்ளக அவிருத்தி வேலைகள் பிரதிஅமைச்சர் ஹரீஸின் வேண்டுகோளுக்கினங்க கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீரின் 3மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இடம்பெறுகின்றன.

நிறைவுறும் தருவாயில் உள்ள குறித்த வேலைத்திட்டத்தினை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின்இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, கே.எம். தௌபீக் ஆகியோர் நேரில் சென்றுபார்வையிட்டனர்.

வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு, நோயாளர்கள் தங்கி சிகிச்சை பெறும் சிகிச்சைப் பிரிவு, மருந்தகம் போன்ற பல பிரிவிகளை உள்ளடக்கியதாக குறித்த ஆயுர்வேத வைத்தியசாலை செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -