தேர்தல் காலங்களில் முஸ்லிம் காங்கிரசின் தலைமையினால் கல்குடாவிற்கு தேசிய பட்டியல் தருகின்றோம் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் நம்பிக்கையுடன் இருந்த கல்குடா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுக்கு மத்தியில் அண்மையில் கட்சியின் செயலாளர் நாயகத்தின் பிரச்சனைக்கு முடிச்சு போடுவதற்காக ஹசன் அலிக்கு கொடுக்க இருக்கும் ஊர்ஜீதப்படுத்தப்பட்ட செய்தியும், மறுக்க இயலாத தலைமையின் அறிக்கையும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்ற விடயத்தினை நடு நிலைமையுடன் சிந்தித்து பார்க்குமிடத்தில் கல்குடாவிற்கான தேசிய பட்டியல் விவகாரத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமையினை முழு குற்றவாளியாக கருத முடியாது என கல்குடாவிற்கு முஸ்லிம் காங்கிரசினால் வாக்குறுதி அளிக்கப்பட்டு தேசிய பட்டியல் கதாநாயகனான கருத்தப்படுகின்ற கல்குடா தொகுதி முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் றியாழ் தெரிவிக்கின்றார்.
மர்ஹூம் அஸ்ரப் அவர்களின் காலத்தில் இருந்து மட்டக்களப்பு கல்குடா தொகுதி முஸ்லிம் மக்கள் முஸ்லிம் காங்கிரஸ் மீது அதீத நம்பிக்கைகளை வைத்து பலத்த சவால்களுக்கும், துயரங்களுக்கும் மத்தியில் தங்களை தூய மு.காவின் விசுவாசிகளாக, போராளிகளாக அடையாளப் படுதியுள்ளார்கள்.
கடந்த 2010ம் ஆண்டும் தேசிய பட்டியல் கல்குடாவிற்கு தருவதாக கூறப்பட்டாலும் 2015ம் ஆண்டு தேர்தல் வரைக்கும் அதனை சீறீலங்கா முஸ்லிம் காங்கிரசும் அதனை தலைமையும் நிறைவேற்ற தவறிவிட்டது என்றே மாற்றுகத்தில்லாமல் கூற முடியும். அதற்கு பிற்பாடு கட்சியின் தலைமையான அப்துர் ரவூப் ஹக்கீமின் நேரடி முயற்சியினால் 2015ம் ஆண்டு கல்குடாவிற்கான வேட்பாளராக அறிமுகப்படுத்தப்பட்ட கணக்கறிஞர் றியாழ் 9000 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை கல்குடா பிரதேசத்தில் இருந்து கட்சிக்கு பெற்றுக்கொடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு ஆசனத்தினை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக்கொள்வதற்கு மிக முக்கிய ஒருவராக வழியமைத்துக் கொடுத்திருந்தார்.
வழமைபோல தேர்தலுக்கு பிற்பாடு அதோ கல்குடாவிற்கு தேசிய பட்டியல் என்றும், இதோ தேசிய பட்டியல் என்றும் கல்குடா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் எதிர்பார்ப்புக்களுடன் இருந்த சமயத்தில் அத்தேசியல் பட்டியலானது திருகோணமலை எம்.எஸ்.தெளபீக்கிற்கு கொடுக்கப்பட்டது. இருந்தும் ஆசனம் எதுவும் இல்லாத திருகோணமலைக்கு கொடுக்கப்பட்டது நியாயமாக போராளிகளாலும் மூத்த அரசியல்வாதிகளாலும் பார்க்கப்பட்டதினால் திருகோணமைக்கு தலைமை கொடுத்த நியாயம் என்பது போராளிகள் மத்தியில் பேசப்படும் விடயமாக மாறியிருந்தது. ஆனால் அடுத்த தேசிய பட்டியலினை தற்காலிகமாக பதவியில் இருந்த சல்மான் இராஜினாம செய்து அதனை கல்குடவிற்கு வழங்குவார்கள் என்ற நப்பாசையுடன் கல்குடா முஸ்லிம்காங்கிரஸ் போராளிகல் பெருமூச்சு விட்டவாறு ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருந்தனர்.
ஆனால் கட்சியின் செயாலாளர் ஹசன் அலியின் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு தற்காலிகமாக தேசிய பட்டியல் அதிகாரத்தில் இருந்த சல்மான் இராஜினாமா செய்து அதனை ஹசன் அலிக்கு கொடுக்க இருக்கும் ஊர்ஜீதப்படுத்தப்பட்ட செய்தியும் தலைமையின் மறுக்க இயலாத அறிக்கையும் மீண்டும் ஒரு முறை கல்குடா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளையும், ஆதரவாளர்களையும் கட்சியின் தலைமை ஏமாற்றி விட்டதா என உயர்பீட உறுப்பினர் கணக்கறிஞர் றியாலிடம் வினவிய வேலையிலே கல்குடாவிற்கான தேசிய பட்டியல் விவகாரத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமையினை முழு குற்றவாளியாக கருத்த முடியாது என தெரிவித்தார்.
இந்த நிலையிலே முஸ்லிம் .காக்கிரசின் தலைமை மக்களின் மீதும் அதன் தூய போராளிகளின் மீதும் பற்று வைத்திருந்தால் தேசியப்பட்டியலினை கல்குடாவிற்கே வழங்கியிருக்க வேண்டும். ஆனால் சுயலாப அரசியலின் விளைவு, ஹசனலிக்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட இருக்கின்றது. இது ஹக்கீம் எனும் தனிமனித இருப்பை உறுதிப்படுத்தும் அல்லது தக்கவைக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட முடிவாகவும் கல்குடாவின் உண்மையான போராளிகளின் உணர்வுகளை புறக்கணித்து ஹசனலிக்கு வழங்கப்படும் செயலாகவும் கல்குடா பிரதேசத்து முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளின் ஆதங்கமாக இருக்கும் அதே நேரத்தில், சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படும் விடயமாக மாறி தற்பொழுது கல்குடா பிரதேசத்தில் சூடு பிடித்துள்ள விடயமாக வருகின்றதனை காணக்கூடியதாக உள்ளது.
மேலும் கல்குடாவிற்கு முஸ்லிம் காங்கிரசின் தலைமையானது தேசிய பட்டியல் தருவதாக வாக்குறுதி அளித்துவிட்டு தொடர்ந்து கல்குடா மக்களை ஏமாற்றி வருவதினால் வாக்களித்துள்ள கல்குடா மக்களுக்கு எதனை கூறயுள்ளீர்கள்? சமபந்தமாகவும் அதனோடு சேர்த்து தொடுக்கப்பட்ட பல கேள்விகளுக்கு முஸ்லிம் காங்கிரசின் உயர் பீட உறுப்பினரும் கல்குடா தொகுதி அமைப்பாளரும் கணக்கறிஞருமான றியாழ் வழங்கிய பதில்கள் எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.