நிலவின் அழகை ரசிக்க வைத்து குழந்தைகளுக்கு சோறு ஊட்டுகின்ற மிகத் தெளிவான யுக்தி முஸ்லீம்கள் விடயத்தில் சர்வதேசம் கையாளுகின்றது. சிங்கள இனவாதம் என்பதை வடகிழக்கு வெளியே நிகழ்த்தி ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பிண்ணனியில் அவற்றை கிழக்கில் நிகழ்த்தி முஸ்லிம்களை முழுமையாக திசை திருப்பி வடக்கு கிழக்கை இணைப்பதற்கான ஒழுங்கும் அவற்றுக்கான வேலை திட்டமும் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அவற்றின் பின்னணி தான் இனவாதிகளின் மட்டக்களப்பு விஜயமாகும்.
பேருவளை அழுத்கம போன்ற நகரங்களை அழித்த நீதிமன்ற கட்டளையை வீதியில் வைத்து கிழித்தெறிந்த ஒருவருடன் நீதியமைச்சர் பேச்சு மேசையில் இருப்பது தொடர்பில் எமது தலைமைகளின் நிலைப்பாடு என்ன?
ஏற்கனவே சர்வதேசத்தின் திட்டமிடலுக்கு பலியான தலைவர்கள் ஒப்புதல் அளித்த நிலையில் அவர்களது கட்சிகளில் இருக்கின்ற ஒரு சிலரின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாலுமே மிக கவனமாக அது தொடர்பில் மெளனாகவும் கவனமாக கையாளுவதாகவுமே உணர முடிகிறது.
இனவாத சக்திகளை கிழக்கு மாகாணத்தில் உள் இணைப்பதற்கான சதி முஸ்லிம்களை சிங்களவர்களுடன் மோதச் செய்கின்ற நிலையை தோற்றுவித்து இரண்டு மாகாண முதல்வர்களின் ஒப்புதலுடன் பாராளுமன்ற அனுமதியுடனும் வடக்கு கிழக்கை இணைப்பதற்கான முயற்சி என்பதை யாரும் மறுதலிக்க முடியாத உண்மையாகும்.
அது போக மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்குவது தொடர்பில் பாராளுமன்ற உப குழு பரிந்துரை செய்திருப்பது தொடர்பில் எம் தலைவர்கள் ஏது பேசுகிறார்களா?
அவ்வாறு ஏற்பட்டால் இணைந்த வடக்கு கிழக்கில் முஸ்லீம்களின் நிலை என்ன?
மீண்டும் எம்மை நசுக்கின்ற பாரதூரமான விளைவுகளை குறித்த பிரதேசங்களின் அரசியல் தலைவர்களும் பேசாமல் அது தொடர்பில் விமர்சனங்களை முன் வைக்காமை மிகப் பாரிய துரதிஷ்டவசமானது.
எனவே எம்மவர்களின் நிம்மதியான வாழ்க்கை கான ஒழுங்கு படுத்தலுக்கு எமது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்ளும் சுதந்திர கிழக்கின் கரங்களில்எமது எதிர்காலத்தை தக்க வைத்துக் கொள்வோம்.
கட்சிகளின் உள்ளக அமைப்பு பிரச்சினை களையும் தேசிய பட்டியல் விவகாரங்களையும் தூக்கிப்பிடிக்கின்ற குறை நிலை அரசியல் செய்வதற்கான நேரம் இதுவல்ல. எமக்கான தீர்வை நோக்கி நகரவும் டயஸ்போராவின் அஜன்டாவை தகர்த்தெறியும் உரிமைக்கான சமருக்காக சுதந்திர கிழக்கு அழைக்கின்றது.