எம்.வை.அமீர் யூ.கே.காலிதின்-
சாய்ந்தமருது சன்பிளவர் விளையாட்டுக்கழகம், ஆரம்பிக்கப்பட்டு 23 வருடங்கள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் நிகழ்வும் திறமைகாட்டிய வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வும் 2016-12-24 ஆம் திகதி சீ பிறீஸ் கேட்போர்கூடத்தில் கழகத்தின் தலைவர் ஏ.எஸ்.அஸ்வர் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் பிரதேச செயலாளர் எம்.ஐ.எம்.தௌபீக் கலந்துகொண்டிருந்தார். கௌரவ அதிதியாக பொறியியலாளர் கமால் நிஷாத்தும் அதிதிகளாக இளைஞர் பாராளமன்ற உறுப்பினர் எப்.எம்.டில்சாத்,கிராமசேவை உத்தியோகத்தர் லத்தீப் நாசர், விளையாட்டு உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.றஜாய் ஆகியோர் பங்குகொண்டிருந்தனர்.
இளம் விளையாட்டு வீரர்களால் மண்டபம் நிறைந்திருந்த இந்நிகழ்வில் உரையாற்றிய தலைவர் ஏ.எஸ்.அஸ்வர், குறித்த தங்களது விளையாட்டுக்கழகத்தின் கடந்தகால செயற்பாடுகள் அவர்கள் பெற்றுக்கொண்ட வெற்றிகள் மற்றும் சவால்கள எதிர்காலத்தில் கழகத்தை கொண்டுசெல்லத் தீர்மானித்துள்ள திட்டங்கள் தொடர்பான பல்வேறு கருத்துக்களை வெளியிட்டார்.
சாய்ந்தமருது சன்பிளவர் விளையாட்டுக்கழகம், தனது செயற்பாடுகளை விளையாட்டுடன் மட்டும் மட்டுப்படுத்தி நில்லாது ஏனைய சமூக சேவை பணிகளுடனும் ஈடுபடுத்தி தங்களது பயணத்தை கொண்டுசெல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
நிகழ்வில் பிரதம அதிதி, கௌரவ அதிதி மற்றும் அதிதிகளும் உரையாற்றினர். இதன்பின்னர் 2017 ஆண்டுக்கான புதிய நிருவாகிகள் தெரிவு செய்யப்பட்டனர்.
சன்பிளவர் விளையாட்டுக்கழகத்தின் 2017 ஆண்டுக்கான புதிய தலைவராக பொறியியலாளர் கமால் நிஷாத் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார். செயலாளராக கழகத்தின் முன்னாள் தலைவர் ஏ.எஸ்.அஸ்வர் தெரிவு செய்யப்பட்டதுடன் பொருளாளராக எம்.எம்.எம்.றாபீக் தெரிவுசெய்யப்பட்டார்.
கழகத்தின் தவிசாளராக முன்னாள் பிரதேச செயலாளர் எம்.ஐ.எம்.தௌபீக்கும் முகாமையாளராக எம்.ரி.நௌஷாட்டும் ஊடக இணைப்பாளராக யூ.கே.காலிதினும் இன்னும் பல நிருவாகிகளும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் உள்ளிட்ட ஆலோசனைக்குளுவும் தெரிவுசெய்யப்பட்டது.
இறுதியாக விளையாட்டில் சிறந்து விளங்கியவர்கள் நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.