இன்று முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைக் குறிப்பிட்டார்.
வரவு செலவுத்திட்டம் தொடர்பான விவாதத்தில் சபை உறுப்பினர்கள் ஈடுபட்டிரு்ததால் விசேட அபிவிருத்தி தொடர்பான சட்டமூலத்தை ஆராய்வதற்கு கால அவகாசம் வேண்டும் என்பதால் அது குறித்து ஆராய்ந்ததன் பின்னர் கிழக்கு மாகாண சபையில் விவாதமொன்றை நடத்தியதன் பின்னர் மாகாண சபை உறுப்பினர்களின் நிலைப்பாட்டுக்கமைய விசேட அபிவிருத்திகள் தொடர்பான சட்டமூலம் தொடர்பில் தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன் எதிர்வரும் மாதம் 30 ஆம் திகதி வரை மாகாண சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் அன்றைய தினம் விசேட அபிவருத்திகள் சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பொன்றை நடத்தி அது தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்படவுள்ளது.
இதேவேளை 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கடந்த வருடத்துக்கு அமைவாக 53 வீத நிதி குறைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் எமது அபிவிருத்தி்க்கு பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது,நாம் முன்னெடுத்துவரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு இதன் மூலம் தடங்கல்களும் ஏற்பட்டுள்ளன.
எனவே எமது மாகாணத்துக்கு தேவையான நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் முழுமையான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம்.எமது மாகாணத்துக்கு தேவையான நிதியை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வழங்குவார் என எதிர்ப்பார்க்கின்றோம்,
அதற்கான பேச்சுவார்த்தைகளை நாங்கள் இன்றே ஆரம்பிக்கவிருக்கின்றோம்.பிரதமருடன் இன்று அலரி மாளிகையில் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையில் இது தொடர்பில் நாம் கோரிக்கை விடுக்கவுள்ளோம்.
அது மாத்திரமன்றி தற்போது எமது மாகாணத்தில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புதல்,தொண்டர் ஆசிரியர் பிரச்சினை மற்றும் மத்திய அரசின் அமைச்சுக்களில் எமது மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விரைவில் பெற்றுக் கொள்வது தொடர்பிலும் நாம் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளோம்,
அடுத்த ஆண்டு ஜனவாரி 30 ஆம் திகதிக்குள் எமது மாகாணத்திற்கு தேவையான நிதியை மாகாணத்துக்கு பெற்றுக் கொள்வதற்கு நாம் முழுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதுடன் இது தொடர்பில் இன்று பிரதமருடன் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையில் நாம் வலியுறுத்தவுள்ளோம்.
அத்துடன் எமது மாகாணத்தின் நிர்வாகத்தை இம்முறை வினைத்திறன் மிக்கதாய் மாற்றியுள்ளமை எமது மாகாண சபை கண்ட ஒரு வெற்றியாய் நாம் கருதுகின்றோம்.
எமது மாகாணத்தில் மேலும் சில பிரச்சினைகள் காணப்படுகின்றன.யுத்த்ததால் கணவனை இழந்தவர்களின் வாழ்வாதாரம்,காணிப் பிரச்சினை,வீடுகள் இல்லாத பிரச்சினை,தனி நபர் வருமானத்தை அதிகரித்தல் போன்றை செயற்பாடுகள் குறித்து அடுத்த ஆண்டுக்குள் தீர்வுகளை ப் பெற்றுக் கொள்வதற்கு நாம் முழுமையான முயற்சிகளை முன்னெடுக்கவுள்ளோம்.
இம்முறை நிதியமைச்சரான முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்துக்கு எதிர்ப்பாக ஒரு வாக்குகூட முன்வைக்கப்படாமையும் ஆதரவாக 24 வாக்குகள் கிடைத்தமை மிக முக்கியமான விடயமாகும்.