ஊவா மாகாண ஆளுநர் எம்.ஜீ. ஜயசேனவினவால் வாக்கெடுப்புக்காக நேற்று (22) தாக்கல் செய்யப்பட்ட ஊவா மாகாண சபையின் அபிவிருத்தி விஷேட ஏற்பாடுகள் சட்டமூலம் மேலதிக 04 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.
அபிவிருத்தி விஷேட ஏற்பாடுகள் சட்டமூலத்துக்கு ஆதரவாக 09 வாக்குகள் பெறப்பட்ட நிலையில் எதிராக 13 வாக்குகள் பெறப்பட்டுள்ளது. ஊவா மாகாண முதலமைச்சர் சம்பத் தசநாயக்க குறித்த சட்டமூலத்துக்கு வாக்களிக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை குறித்த சட்டமூலத்துக்கு ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் ஆதரவாகவும், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.
டைலிசிலோன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -